For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கிய குமாரசாமி ஆட்சி அமைக்கிறார்.. யார் இவர்?

37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற குமாரசாமியின் கட்சி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கிறார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கிங்காக இருந்தவர் கிங்மேக்கரானார்... கௌடா வழியில் குமாரசாமி!

    பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற குமாரசாமியின் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமரவுள்ளது.

    கர்நாடகத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம்- பகுஜன் சமாஜ் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டது. இதில் பாஜக 104 தொகுதிகளிலும் , காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் மஜத 37 தொகுதிகளிலும், பிஎஸ்பி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

    Biodata of H.D.Kumarasamy Gowda

    இந்நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தங்களுக்கு ஆதரவு அளித்தால் குமாரசாமிதான் முதல்வர் என்ற ஆஃபரை ஏற்று மஜத- காங்கிரஸ் கட்சி இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதற்குள் முதல்வராக எடியூரப்பா பதவியேற்று கர்நாடகத்தில் பல்வேறு திருப்பங்கள் நடந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    தற்போது வரும் 21இல் குமாரசாமி ஆட்சி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் இந்த குமாரசாமி. மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச் டி தேவகௌடாவின் மகனாவார். இவர் ஹாசன் மாவட்டத்தில் கடந்த 1975-ஆம் ஆண்டு பிறந்தார்.

    இவர் 1996-ஆம் ஆண்டு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று எம்பி.யானார். பின்னர் கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 2004-2008 வரை எம்எல்ஏவாக இருந்தார். அதைத் தொடர்ந்து 2006- அக்டோபர் 2007-ஆம் ஆண்டு வரை கர்நாடகத்தின் முதல்வராக இருந்தார். 2009-ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி குழுவின் உறுப்பினரானார்.

    பின்னர் 15-ஆவது மக்களவை தேர்தலில் 2009-இல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். தற்போது பாஜக ஆட்சி பிடிக்கக் கூடாது என்பதற்காக எதிர் கட்சிகள் ஒன்றிணைந்ததில் குமாரசாமி முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

    English summary
    Kumarasamy is going to become CM of Karnataka. Who is he? Here is the list of biodata.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X