ஒடிஷா பூரி ஜெகந்நாதர் கோவில் சாவியை கண்டுபிடிச்சுதான் கொடுங்க.. மோடிக்கு விகே பாண்டியன் பதிலடி!
புவனேஸ்வர்: ஒடிஷாவின் பூரி ஜெகந்நாதர் கோவில் சாவி குறித்து கேள்வி எழுப்புகிற பிரதமர் மோடி தமக்கு கீழே உள்ள அதிகாரிகள் மூலமாக அதனை கண்டுபிடித்து ஒடிஷா மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான விகே பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. ஒடிஷாவில் 25 ஆண்டுகளாக பிஜூ ஜனதா தளம்தான் ஆட்சியில் இருந்து வருகிறது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக அரசில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, தற்போது பிஜூ ஜனதா தளத்தின் முக்கிய தலைவராகவும் உருவெடுத்துள்ளார்.

இதனால் ஒடிஷாவில் தேர்தல் பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் விகே பாண்டியனை குறிவைத்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரதமர் மோடி பேசுகையில், பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூலத்தின் சாவி எங்கே என்பதில் ஒடிஷா மக்கள் ஆளும் அரசு மீது கோபமாக உள்ளனர். அந்தக் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டதா?தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? தமிழ்நாட்டுக்கு பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல சாவியை அனுப்பியவர்களை மன்னிப்பார்களா மக்கள்? என பேசியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு தமிழ்நாட்டு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிஷா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா? தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? என்று சாடியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள விகே பாண்டியன், பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூலத்தின் சாவி எங்கே என்பதை தமக்கு கீழே உள்ள அதிகாரிகளை வைத்து மோடி கண்டுபிடித்து ஒடிஷா மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியை காணவில்லை என மாவட்ட நிர்வாகம் முதலில் தெரிவித்திருந்தது. பின்னர் மாற்று சாவி கிடைத்துவிட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் கூறியது. இது தொடர்பாக விசாரணைகளும் நடத்தப்பட்டன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications