கொல்கத்தா கலவரம்.. போலீஸ் உயரதிகாரியை துரத்தி துரத்தி அடித்த பாஜகவினர்.. தீயாக பரவும் வீடியோ
கொல்கத்தா: கொல்கத்தாவில் பாஜகவினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததன் ஒருபகுதியாக, காவல் உதவி ஆணையர் (அசிஸ்டெண்ட் கமிஷனர்) ஒருவரை சூழ்ந்து கொண்டு அக்கட்சியினர் கண்மூடித்தனமாக துரத்தி துரத்தி அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாஜகவினரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சித் தலைவர்கள் போலீஸார் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.
அமைதி பேரணி நடத்திய பாஜகவினர் மீது முதலில் தாக்குதல் நடத்தி அவர்களை போலீஸார் தான் தூண்டிவிட்டதாக மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கூறியுள்ளார்.

திரிணமூல் - பாஜக மோதல்
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவுக்கும், ஆளும் திரிணமூல் கட்சிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது. கடந்த சில மாதங்களாக பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளை பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு வந்தனர். இதனால் இந்த மோதல் உச்சத்தை அடைந்ததது.

பாஜக பேரணி அறிவிப்பு
இதன் ஒருபகுதியாக, திரிணமூல் காங்கிரஸ் அரசை கண்டித்து கொல்கத்தாவில் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை பாஜக அறிவித்தது. போலீஸார் இதற்கு அனுமதி தரவில்லை. இருந்தபோதிலும், நேற்று காலை முதல் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் இருந்து ரயில்கள் மூலமாகவும், பேருந்துகள் மூலமாகவும் ஆயிரக்கணக்கான பாஜகவினர் கொல்கத்தாவில் குவியத் தொடங்கினர். பிறகு பல பகுதிகளில் இருந்து அவர்கள் அணி அணியாக தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக வந்தனர்.

பெரும் வன்முறை
அனுமதி இல்லாமல் பேரணி நடத்தப்பட்டதால், பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீஸார் மீது கற்கள், சோடா பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸாரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. குறிப்பாக, நார்த் 24 பர்கனாஸ், ஹவுரா பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர கலவரம் வெடித்தது.

போலீஸார் படுகாயம்
போலீஸார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் வன்முறையை கட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பாஜக தொண்டர்கள் இருந்ததால் வன்முறையை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து, ரிசர்வ் படை, அதிரடி படை போலீஸார் வரவழைக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர். பல காவலர்களுக்கு மண்டை உடைந்தன. 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களின் வாகனங்களும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

உதவி ஆணையர் மீது தாக்குதல்
இந்நிலையில், கொல்கத்தாவில் பாஜகவினரிடம் சிக்கி உதவி ஆணையர் ஒருவர் கடுமையாக தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உதவி ஆணையர் வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக கையில் லத்தியுடன் செல்கிறார். ஆனால், ஒரு சில நொடிகளிலேயே அவரை 50-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர்.

நிலைக்குலைந்த போலீஸ் அதிகாரி
பின்னர் அவரை கற்கள், இரும்பு ராடுகள், கம்புகளை கொண்டு அவர்கள் தாக்குகின்றனர். இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் உதவி ஆணையர் ஓடிச் செல்கிறார். ஆனால் அவரை விடாமல் வன்முறை கும்பல் துரத்திச் செல்கிறது. ஒருகட்டத்தில், உதவி ஆணையர் கால் இடறி கீழே விழவே அவரை பாஜகவினர் கட்டையால் அடித்தும், காலால் மிதித்தும் தாக்குதல் நடத்துகின்றனர். இதில் அவர் நிலைக்குலைந்து விட, அங்கிருந்த மற்ற சிலர் அவரை மீட்டு கொண்டு செல்கின்றனர். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவரது பெயரை வெளியிட காவல்துறை மறுத்துவிட்டது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரி என்றும் பாராமல் பாஜகவினர் அவரை தாக்கியதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications