Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தினமும் 12 மணிநேர பிரசாரம்.. தம்பி மனைவியை தோற்கடிக்கணும்.. குஜராத் தேர்தலில் ஜடேஜா அக்காள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் ரிவாபாவை தோற்கடிக்க காங்கிரஸ் சார்பில் ரவீந்திர ஜடேஜாவின் அக்காள் நயினா, தந்தை அனிருத் சிங் ஆகியோர் களமிறங்கி தினமும் 10 முதல் 12 மணிநேரம் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. தற்போது 2 கட்டங்களாக அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் டிசம்பர் 1ல் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 8 ல் வெளியாக உள்ளது.

மும்முனை போட்டி

மும்முனை போட்டி

குஜராத்தை பொறுத்தமட்டில் காலம் காலமாக இருமுனை போட்டி நிலவி வருகிறது. இது பாஜக, காங்கிரஸ் இடையே இருந்தது. தற்போதும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் ஆம்ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. இதனால் மும்முனை போட்டி நிலவி வருகிறது. மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் வேளையில் காங்கிரசும், ஆம்ஆத்மியும் புதிதாக ஆட்சி அமைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்னர்.

ஜடேஜாவின் மனைவிக்கு வாய்ப்பு

ஜடேஜாவின் மனைவிக்கு வாய்ப்பு

இந்த தேர்தலில் இந்திய கிரிக்கெட் வீரரான ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபாவுக்கு பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. இவர் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் சிட்டிங் பாஜக எம்எல்ஏவாக தர்மேந்திரசிங் எம் ஜடேஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் ரிவாபாவின் பக்கம் அதிர்ஷ்ட காற்று அடித்துள்ளது. தற்போது ரிவாபா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பிரசாரத்தை துவங்கி உள்ளன.

பரவிய தகவல்

பரவிய தகவல்

இந்நிலையில் தான் ஜடேஜாவின் மனைவி ரிவாபாவை எதிர்த்து ஜடேஜாவின் அக்காள் நயினாவை காங்கிரஸ் கட்சி களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகின. ரிவாபா பாஜகவில் இணைந்த நிலையில் தான் நயினா தனது தந்தை அனிருத்சிங் ஜடேஜாவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நயினாவுக்கு ஜாம்நகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அவர் மாநில மகளிர் பிரிவு செயலாளராக உள்ளார். இதனால் அவர் தொகுதியில் அனைவரும் பரீட்சயமானவர்.

வாய்ப்பு மறுப்பு

வாய்ப்பு மறுப்பு

இதனால் ரிவாபாவை எதிர்த்து ஜாம் நகர் வடக்கு தொகுதியில் நயினா போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியான. ஆனால் இது நடக்கவில்லை. மாறாக இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிபேந்திர சிங் ஜடேஜா நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் ரிவாபாவை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பு நயினாவுக்கு கைநழுவி போய் உள்ளது. இருப்பினும் நயினா மனம் தளரவில்லை.

10-12 மணிநேர பிரசாரம்

10-12 மணிநேர பிரசாரம்

சகோதரர் ஜடேஜாவின் மனைவியான ரிவாபாவை தேர்தலில் தோற்கடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதாவது நயினா தனது தந்தை அனிருத்சிங் ஜடேஜாவுடன் சேர்ந்து ஜாம் நகர் வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிபேந்திர சிங் ஜடேஜாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வீடுவீடாக சென்று மக்களை பார்த்து துண்டு பிரசுரங்கள் வழங்கி ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார். பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். ஒருநாளைக்கு 10 முதல் 12 மணிநேரம் வரை அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளார். எப்படியாவது சகோதர் ஜடேஜாவின் மனைவி ரிவாபாவை தோற்கடிக்க கங்கணம் கட்டிக்கொண்டு அவர் செயல்பட்டு வருகிறார்.

நயினா கூறுவது என்ன?

நயினா கூறுவது என்ன?

இதுபற்றி நயினா கூறுகையில், ‛‛நானும் ஜாம் நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தேன்.ஆனால் கட்சி வாய்ப்பு மறுத்துள்ளது. எனக்கு வாய்ப்பு வழங்கி இருந்தால் நிச்சயம் சகோதரரின் மனைவியை எதிர்த்து களமிறங்கி இருப்பேன். இது நடக்கவில்லை. என்னை விட காங்கிரஸ் கட்சியின் நிலையை நன்கு புரிந்து கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் எடுக்கும் முடிவு சரியாக தான் இருக்கும். மேலும் நான் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை நம்புகிறேன். எனக்கு டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தொகுதியில் பிரபலமாக உள்ள வேட்பாளர் பிபேந்திர சிங்கிற்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து வருகிறேன்'' என்றார்.

உறவை பாதிக்கவில்லை

உறவை பாதிக்கவில்லை

மேலும் நயினா கூறுகையில், ‛‛நான் ரவீந்திர ஜடேஜாவையோ அல்லது அவரது மனைவி ரிவாபாவை சந்திக்கும் போது, ​​அவர்களுடன் அரசியல் பற்றி பேசுவதில்லை. 2019 முதல், நாங்கள் எங்களுக்கு பிடித்த கட்சிகளை தேர்வு செய்து அதில் பயணப்பட்டு வருகிறோம். இது எங்கள் உறவை பாதிக்கவில்லை. தேர்தலுக்காக அவர்கள் போராடுவது போல் நான் எனது கட்சிக்காக அவர்களை எதிர்த்து போராடுகிறேன்'' என்றார்.

இரண்டாக பிரிந்த குடும்பம்

இரண்டாக பிரிந்த குடும்பம்

நயினா இப்படி கூறினாலும் கூட தற்போதைய குஜராத் மாநில தேர்தல் என்பது ஜடேஜாவின் குடும்பத்தை இரண்டாக பிரித்துள்ளது. பாஜக சார்பில் களமிறங்கிய மனைவி ரிவாபாவுக்கு ஆதரவாக ரவீந்திர ஜடேஜா இணையதளங்களில் பிரசாரத்தை துவங்கிய நிலையில் தான் அவரது அக்காள் நயினா மற்றும் தந்தை அனிருத் சிங் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+