5 வது முறையாக குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக.. இந்தியா டுடே கருத்துக் கணிப்பு
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜகவே மீண்டும் வெற்றி பெற்று 5வது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் என்று இந்தியா டுடே அக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
டெல்லி: குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவே வெற்றி பெற்று 5 வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே அக்சிஸ் மை இந்தியா கணித்துள்ளது.
குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இங்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தை ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி விட்டார்.

தற்போது 4வது முறையாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் 5வதாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். குஜராத்தில் 1998ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
கேசுபாய் படேல் முதல்வராக பதவி வகித்தார். 2001 ஆம் ஆண்டு கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து முதல்வராக பொறுப்பேற்றார் மோடி. குஜராத்தில் அவர் மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மக்களை கவரவே தொடர்ந்து 2002, 2007, 2012 ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் பாஜகவே ஆட்சியை தக்கவைத்தது.
குஜராத் முதல்வராக 4 முறை பதவி வகித்த மோடி தற்போது பிரதமராக உள்ளார். எனவே குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் முழு முனைப்போடு பிரச்சாரத்தை முடிக்கி விட்டுள்ளது பாஜக.
இதனிடையே இந்தியா டுடே அக்சிஸ் மை இந்தியா கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியைக் கைப்பற்றும் என்று கணித்துள்ளது.
182 சட்டசபை தொகுதிகளில் பாஜகவிற்கு 115-125 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே கணித்துள்ளது. கடந்த 2007 தேர்தலில் 117 சீட்டுகளிலும், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 116 தொகுதிகளையும் பாஜக வென்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி கட்சி 65 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 2007 தேர்தலில் 59 தொகுதிகளையும், 2012 தேர்தலில் 60 தொகுதிகளையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பிற கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும் என்றும் இந்தியா டுடே கணித்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications