பிரதமரும் உலகத் தலைவர்களுடனான 'கட்டிபிடி' வரவேற்பும்... காங்கிரஸ் கேலி வீடியோவால் சர்ச்சை!
பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களை கட்டிப்பிடித்து வரவேற்பு அளிக்கும் வீடியோவை வெளியிட்டு காங்கிரஸ் கேலி செய்து வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களை கட்டிப்பிடித்து வரவேற்பு அளிக்கும் புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டு காங்கிரஸ் கட்சி கேலி செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் கேலி வீடியோவிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களை சந்தித்த போது அவர்களை வரவேற்ற புகைப்படங்களை வைத்து அதற்கு தனித்தனி தலைப்பிட்டு, சினிமா படத்தில் ஹீரோ,ஹீரோயின்கள் கட்டிபிடிக்கும் கட்சிகளை ஒப்பிட்டு போட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகூ இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் சமயத்தில், பிரதமர் மோடியை கட்டியணைத்து வரவேற்றார். இதில் தொடங்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் போன்ற உலக தலைவர்களை அணைத்துக்கொள்வதும் காட்டபட்டு உள்ளது. டைட்டானிக் படத்தின் கப்பலில் செல்லும் காட்சி ஒன்றும் அதில் காட்டபட்டு உள்ளது.
|
பொறுப்பில்லாத காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சியின் இந்த கேலி வீடியோவிற்கு பாஜக கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாஜகவின் சம்பிட் பத்ரா இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் "இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி இது போன்றதொரு பதிவை வெளியிட்டிருப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, அதிலும் இஸ்ரேல் பிரதமர் இந்தியா வந்திருக்கும் சமயத்தில் இப்படி ஒரு பதிவை காங்கிரஸ் வெளியிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
|
காங்கிரஸ் கட்சியின் முதிர்ச்சியின்மை
காங்கிரஸ் கட்சி இன்னும் வளர்ந்து விட்ட அரசியல் கட்சியாக மாறவில்லை என்பதை இந்த மோசமான வீடியோ பதிவு சுட்டிக் காட்டுவதாக பாஜகவின் பிரகாண் ஜவடேகர் தெரிவித்துள்ளார். முக்கியமான பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் அது பற்றி விவாதிக்காமல் இது போன்ற கேவலமான வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டிருப்பது அந்த கட்சி இன்னும் போதிய முதிர்ச்சியை பெறவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

பிரதமரும் பெண் தலைவர்களும்
உலகத் தலைவர்களுடனான வரவற்பு மட்டுமின்றி பெண் தலைவர்கள் மோடியின் வரவேற்பை நிராகரித்ததும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது. ஜெர்மன் சேன்செல்லர் ஏஞ்செலா மார்க்கல் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது அவருக்கு கை கொடுக்காமல் சென்றது, ஜப்பானின் முதல் பெண்மணி ஏப் புகைப்படம் எடுக்க மோடியின் அருகில் நிற்காமல் சென்றது உள்ளிட்டவையும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

வியந்த நேத்தன்யாகூ
இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகூ பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் அளித்த உற்சாக வரவேற்பு வியப்பை அளித்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருந்தார். என்னுடைய நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்றும் நேத்தன்யாகூ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications