கொந்தளிப்பில் தமிழகம்.. கொழும்பில் கோத்தபாயவுடன் பாஜக பொதுச்செயலர் ராம் மாதவ் 'நல்லுறவு' ஆலோசனை!!
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அநாகரிகமாக விமர்சித்து கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து தமிழகமே கொந்தளிக்கிறது. ஆனால் பாரதிய ஜனதாவின் பொதுச்செயலர் ராம் மாதவோ, இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபாய ராஜபக்சேவை நேற்று சந்தித்து 'இருதரப்பு நல்லுறவு' குறித்து பேசியுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு துறை இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து எழுதும் கடிதங்களை கொச்சைப்படுத்தி கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இதற்கு திமுக, தேமுதிக, பாமக, இடதுசாரிகள், மதிமுக என ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே கடும் கண்டனம் தெரிவித்தன.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றும் வருகின்றன. இப்படி தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் ராம் மாதவ், அதே இலங்கை பாதுகாப்பு துறையின் செயலர் கோத்தபாய ராஜபக்சேவை நேரில் சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த தகவலையும் இலங்கையின் பாதுகாப்பு துறை இணையதளம்தான் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள பாதுகாப்புதுறை அமைச்சகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ராம் மாதவ், கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அண்மையில்தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications