என்னை ஒரு வருடமாக நாசம் செய்தார்.. ஆதாரம் இருக்கு.. சின்மயானந்த் மீது மாணவி பகீர் குற்றச்சாட்டு
சின்மயானந்த் தன்னை ஒரு வருடம் சீரழித்ததாக மாணவி தெரிவித்துள்ளார்
Recommended Video
ஷாஜகான்பூர்: "என்னை ஒரு வருடமாக சீரழித்தார்.. அதுக்கு ஆதாரம் இருக்கு.. என்னை மாதிரி நிறைய இளம்பெண்களை நாசம் செய்துள்ளார்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீது மாணவி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுவாமி சின்மயானந்த்.. இவருக்கு வயது 72 ஆகிறது. பாஜக மூத்த தலைவர்.. முன்னாள் மத்திய அமைச்சரும்கூட.. உத்திரபிரதேசத்தில் ஆசிரமங்கள், கல்லூரிகளை நடத்தி வருபவர்.
கடந்த மார்ச் 23-ம் தேதி, சின்மயானந்த் நடத்தி வரும் சட்ட கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டம் படிக்கும் மாணவி ஒருவர் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

மிரட்டல்
அதில், சாந்த் சமூகத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், வெளியில் சொன்னால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பதிவிட்டிருந்தார். ஆனால் இந்த புகாரை சொல்லிய மறுநாளே அந்த மாணவி காணாமல் போய்விட்டார்.

ஆஜர்
இதனால், மாணவியின் தந்தை, ஷாஜகான்பூர் போலீசில் சின்மயானந்த் மீது புகார் தந்ததுடன், மகளை சின்மயானந்த் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினார். இதையடுத்து, சின்மயானந்த் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே மாயமான மாணவி ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டிலும் ஆஜர்படுத்தப்பட்டார். இது சம்பந்தமாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பேட்டி
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, முதல்முறையாக செய்தியாளர்களிடம் பேசினார். தனது முகத்தை கருப்பு துணியால் மூடியிருந்தார். அப்போது மாணவி சொன்னதாவது: "சுவாமி சின்மயானந்த் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். ஒரு வருஷமாக என்னை உடல்ரீதியாக பயன்படுத்திக்கொண்டார்.

ஆதாரங்கள்
என்னை மாதிரியே அவர் ஏராளமான இளம்பெண்களையும் நாசம் செய்துள்ளார். ஆனால் நான் மட்டுமே தைரியமாக எதிர்த்து நிற்கிறேன். சின்மயானந்த் செய்த குற்றச்சாட்டுகளுக்கான வீடியோ ஆதாரம் உட்பட என்னிடம் நிறைய இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் அதை அளிப்பேன்.

ரூ.5 கோடியா?
என்னிடம் சிறப்பு புலனாய்வு குழு 8-ம் தேதி விசாரணை நடத்தினார்கள். எல்லா விஷயத்தையும் சொன்னேன். ஆனால் சின்மயானந்த் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் மீது கற்பழிப்பு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. நான் 5 கோடி ரூபாய் கேட்டேன் என்று சின்மயானந்த்தின் வக்கீல் சொல்கிறார். அது சுத்த பொய். அதனால் அதை பற்றியும் விசாரிக்க வேண்டும்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications