ரூ.5.5 கோடி 'லம்போர்கினி' காரை கிளப்பிய அடுத்த நிமிடமே ஆட்டோவை அடித்து தூக்கிய பாஜக எம்எல்ஏ மனைவி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா அவரது மனைவிக்கு அன்பளிப்பாக ரூ.5.5 கோடி மதிப்புள்ள லம்போர்கினி காரை வழங்கிய சில நிமிடங்களிலேயே அந்த பெண் காரை கொண்டு சென்று ஆட்டோ மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்லது.

மிரா பயந்தர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தா. இவரது மனைவி சுமன் மேத்தா. நேற்று அவருக்கு பிறந்த நாளாம். இதற்காக ரூ.5.5 கோடி மதிப்பு்ள்ள லம்போர்கினி காரை சுமனுக்கு, நரேந்திரா பரிசளித்தார். அந்த போட்டோவை பேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்த நிகழ்வு நடந்த சில நிமிடங்களிலேயே சுமன் அந்த காரை ஓட்டிச்சென்று சாலையோரம் நின்ற ஆட்டோ மீது மோதினார். கார் வேகமாக வருவதை பார்த்து சாலையில் நடந்து சென்ற சிலர் பயந்து ஓடிவிட்டனர். அதனால் அவர்கள் உயிர் பிழைத்தனர்.

நல்லவேளையாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. எம்எல்ஏ மனைவிதான் காரை ஓட்டிவந்தது என தெரிந்ததும் ஆட்டோக்காரர் போலீசில் புகார் அளிக்காமல் 'பெருந்தன்மை' காண்பித்துவிட்டுவிட்டார்.

இதுபற்றி நரேந்திர மேத்தா கூறுகையில், எனது மனைவிக்கு கார் ஓட்டுவதில் 18 வருட அனுபவம் உள்ளது. ஆடி உட்பட இறக்குமதி கார்கள் பலவற்றை ஓட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் பெரிய சேதம் இல்லை. ஆட்டோ ஹெட்லைட்தான் உடைந்துவிட்டது என ககூறியுள்ளார்.

நரேந்திர மேத்தாவின் மனைவி செயலை நெட்டிசன்கள் கண்டித்து வருகிறார்கள். அதிகாரம், பணம் போன்றவை கொடுத்த தைரியத்தால் இவ்வாறு சுமன் கார் ஓட்டியதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

சல்மான் கான் வழக்கை பார்த்து எல்லோருக்கும் தைரியம் வந்துவிட்டதோ என்னவோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+