For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பிராமணர்களை" ஜாதி சொல்லி கூப்பிடலாம்.. ஆனால் "சூத்திரர்" என்று கூப்பிட்டால் தப்பா.. பிரக்யா கேள்வி!

பிரக்யா தாகூர் மறுபடியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: "ஒரு பிராமணரை பிராமணர் என்று அழைக்கும்போது புண்பட மாட்டார்கள்.. ஆனால், ஒரு சூத்திரரை, சூத்ரா என்று அழைத்தால், அவர்கள் தப்பாக நினைக்கிறார்கள்.. மிகவும் மோசமாக உணர்கிறார்கள்.. அவர்களுக்கு அது பிடிக்கவில்லை.. ஏன் என்றால், அது அவர்களின் அறியாமை என்று மத்தியபிரதேசத்தின் சர்ச்சைக்குரிய பாஜக எம்பி பிரக்யா சிங் கூறியுள்ளார்.. பிரக்யாவின் இந்த பேச்சு மறுபடியும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.

போபால் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர், எத்தனையோ சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். நாதுராம் கோட்சே ஒரு தேசப்பக்தராக இருந்தவர்.. இருக்கிறார்.. இன்னும் இருப்பார்.. அவரை தீவிரவாதி என்று ஏன் சொல்கிறீர்கள் என்ற பிரக்யாவின் பேச்சை நாடே உற்றுநோக்கியது.

தற்போது, மேற்குவங்காளத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று இந்து ராஜ்ஜியம் அமையும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.. இந்நிலையில், மற்றொரு சர்ச்சை பேச்சை பேசியுள்ளார்.

 பிரக்யா

பிரக்யா

க்ஷத்திரிய மகா சபா சார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய பிரக்யா தாகூர், "நமது மனு தர்மசாஸ்திரத்தில் இந்த சமூகம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.. அதில் சூத்திரர்களை சூத்ரா என்று சொன்னால், அது அவர்களுக்கு பிடிப்பதில்லை.. தப்பாக நினைத்து கொள்கிறார்கள்.. அதை ஒரு மோசமான வார்த்தையாக கருதுகிறார்கள். அதற்கு காரணம், அவர்களின் அறியாமையே.

 பிராமணர்

பிராமணர்

நீங்கள் ஒரு க்ஷத்திரியரை ஒரு க்ஷத்திரியர் என்று அழைத்தால், அது அவர்களை பாதிக்காது.. மோசமாகவும் உணர மாட்டார்கள்.. ஒரு பிராமணரை ஒரு பிராமணர் என்று கூப்பிட்டு பாருங்கள்,பிரச்சனை இல்லை.. ஒரு வைஷ்யாவை ஒரு வைஷ்யர் என்று அழைத்தாலும் அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள்.. ஆனால் நீங்கள் ஒரு சூத்திரரை சூத்ரா என்று கூப்பிட்டால், அது அவர்களை பாதிக்கிறது... அதை என் தப்பாக எடுத்து கொள்ள வேண்டும்?

 ஆயுதப்படை

ஆயுதப்படை

தங்களது அறியாமை காரணமாகவே அவர்களால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை. இன்றைய க்ஷத்திரியர்கள் தங்கள் கடமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.. அவர்களை ஆயுதப் படைகளில் சேர்க்க அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை உருவாக்க வேண்டும்.. இதனால் அவர்கள் தேசத்துக்காக போராடி அதன் பாதுகாப்பையும் பலப்படுத்த முடியும்.

 பொருளாதார பின்னணி

பொருளாதார பின்னணி

ஏழைகளுக்கு பயனளிக்கும் வகையில் பொருளாதார பின்னணியின் அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்க வேண்டும்.. அதேபோல, விவசாயிகள் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேச விரோதிகள்தான்.. அவர்கள் விவசாயிகள் அல்ல... ஆனால் காங்கிரஸ்காரர்களும் இடதுசாரிகளும் விவசாயிகளின் தோற்றத்தில் இருந்து, இந்த நாட்டிற்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள்.. தவறான தகவல்களையும் பரப்புகிறார்கள்" என்றார். வழக்கம்போலவே பிரக்யாவின் இந்த பேச்சும் சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறது.

English summary
BJP MP Pragya Thakurs controversy speech about Shudras
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X