போபால் பாஜக சாமியார் எம்பிக்கு கொரோனா.. கோமியம் குடிச்சா கொரோனா வராதுனு சொன்னாங்களே அவங்களேதான்..!
போபால் : தினமும் கோமியம் குடிப்பதால் கொரோனா என்னை ஒன்றும் செய்யாது என்று பேசிய பாஜக எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியின் எம்பி ஆக இருப்பவர் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர். அடிக்கடி சர்ச்சை பேச்சுகள் மூலம் பிரபலமானவர் கொரோனா காலத்தில் தெரிவித்த கருத்துக்கள் இணையத்தில் வைரல் ஆனது.
கடந்த மே மாதத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் மிக அதிக பாதிப்பு இருந்தபோது கோபாலை பிரக்யாசிங் தாக்கூர் காணவில்லை என பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

பிரக்யா சிங் தாக்கூர் எம்.பி.
அப்போது கடந்த ஆண்டு மே மாதம் சாந்தி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரக்யா சிங் தாக்கூர், நாட்டு பசுவின் கோமியத்தை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு விவரித்தார். "நாம் ஒரு நாட்டு பசுவின் கோமியத்தை குடித்தால், அது நம் நுரையீரலில் ஏற்படும் தொற்றுநோய்களைக் குணப்படுத்துகிறது எனவும், நான் மிகுந்த வேதனையில் இருக்கும் போதெல்லாம் கோமியம் குடிப்பேன் என பேசினார்.

நாட்டு பசு கோமியம்
மேலும், நான் தினமும் கோமியம் குடிப்பேன், இதன் காரணமாக, நான் கொரோனாவுக்கு எந்த மருந்துகளையும் எடுக்க வேண்டியதில்லை எனவும், மேலும், கடவுளின் ஆசீர்வாதத்துடன் நான் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை நான் சரியான வகையான மருந்துகளை பசு கோமியம்
போலவே எடுத்துக்கொள்வதால் அது அப்படியே இருக்கும் என்று பிரக்யா சிங் தாக்கூர் கூறினார்.

கொரோனா பாதிப்பு
மேலும் பிரார்த்தனை செய்தபின் பசுவின் கோமியத்தை உட்கொள்வதாக கூறிய பிரக்யா சிங் தாக்கூர், மக்கள் எனக்கு அமிர்தத்தைப் போன்றவர்கள், நான் அவர்களை சுவாசிக்கிறேன் எனவும், தன்னை பாதுகாத்தால் தான் தேசத்துக்காக அர்ப்பணித்த தன் வாழ்க்கையை பாதுக்காக்க முடியும் என பேசியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டிவிட்டர் பதிவு
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரக்யாசிங் தாக்கூர் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில்,இன்று எனது கொரோனா அறிக்கை நேர்மறையானது. நான் மருத்துவர்களின் மேற்பார்வையில் இருக்கிறேன். இரண்டு நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். நாங்கள் உங்களைப் பற்றி கவலைப்படுகிறோம்." என பதிவிட்டுள்ளார்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications