For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாங்க ரஜினி...பாஜகவின் கதவு உங்களுக்காக திறந்தே இருக்கிறது...அமித்ஷா அழைப்பு!

நடிகர் ரஜினிகாந்த்திற்காக தங்களது கட்சியின் கதவு திறந்தே இருக்கும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்காக பாஜகவின் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்று ஆஜ்தக் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான சிக்னல் காட்டினாலும் அவர் எந்த கட்சிக்குப் போவார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் என்றாலும், சிஸ்டம் சரியில்லை என்று அவர் சொன்னதற்கும் அப்படி சொல்லிவிட்டு ஸ்டாலினை ஏன் பாராட்டினார் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் வறுத்தெடுத்து வருகின்றன.

 ஆன்மீக சிந்தனை

ஆன்மீக சிந்தனை

தற்போது தங்களது சித்தாந்தத்தையொட்டி பேசுகிற, ஆன்மீகத்தையே முழுமூச்சாக நினைக்கும் ரஜினியை வைத்து களம் காண பாஜக திட்டமிடுகிறது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு வரவேற்பு தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ரஜினி ஸ்டாலினை பாராட்டியதால் கடுமையாக விமர்ச்சித்தார். ஆனால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட அவர் இன்று அளித்த பேட்டியில் ரஜினி அரசியலுக்கு வருவதை ஆண்டவன் முடிவு செய்வான் என்று சொல்கிறார், ரஜினி மட்டுமல்ல நாங்களும் கடவுளைத் தான் நம்பியிருக்கிறோம் என்றார்.

 குழப்பத்தில் பொன்னார்

குழப்பத்தில் பொன்னார்

அதேநேரத்தில் ரஜினி அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அவர் பாஜகவிற்கு வந்தால் மகிழ்ச்சி என்றார். ஆனால் ஸ்டாலின் சிறந்த நிர்வாகி, சீமான் சிறந்த போராளி என்றெல்லாம் பாராட்டுவது தான் ஏன் என்று புரியவில்லை என்று கூறியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது தனிப்பட்ட விருப்பம் ஆனால் போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வதன் பின்னணி என்ன என்பது தான் புரியவில்லை என்றும் பொன்னார் புலம்பியிருந்தார்.

அமித்ஷா அழைப்பு

இந்த நிலையில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் மத்திய அரசின் சாதனைகள் குறித்து ஆஜ் தக் இந்தி சேனலில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்த்திற்காக பாஜகவின் கதவு எப்போதும் திறந்தே இருப்பதாக வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். அமித்ஷாவின் இந்த ஓபன் அழைப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

 என்ன செய்வார் ரஜினி?

என்ன செய்வார் ரஜினி?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போல பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த், இதனாலேயே சென்னை வந்த போது நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சென்று அவரது வீட்டிலேயே பார்த்து விட்டு வந்தார் மோடிஜி. இந்நிலையில் பாஜகவில் இருந்து அதன் தேசியத் தலைவர் அமித்ஷா விடுத்திருக்கும் ஓபன் அழைப்பை ரஜினிகாந்த் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதே இனி வரும் அரசியல் பரபரப்புகளாக இருக்கும்

English summary
BJP President Amith shah openly calls Rajinikanth to join hands with their Saffron colour party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X