For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிந்து செல்ல அனுமதிக்கமாட்டோம்... அமித்ஷா

இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிந்து செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நாடாளுமன்றம் ஜூலை 18-ல் தொடக்கம் | காஷ்மீரை பிரிக்க அனுமதிக்கமாட்டோம்...அமித்ஷா- வீடியோ

    ஜம்மு: இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிந்து செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.

    கடந்த 2015-ஆம் ஆண்டு பிடிபி கட்சியுடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில் பிடிபி கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி முதல்வராக பொறுப்பேற்றார்.

    BJP will not allow Kashmir to break away from India, says AmitShah

    இந்நிலையில் இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மனகசப்பு காரணமாக மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறியது. இதனால் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து மெஹபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 நாள் பயணமாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா காஷ்மீருக்கு சென்றார். அங்கு 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அமித்ஷா கூறுகையில் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அது இந்தியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கு பாஜக ஒரு போதும் அனுமதிக்காது.

    ஜன சங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் முயற்சியாலேயே காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. காஷ்மீர் குறித்து தவறான கருத்துகளை தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் சைபுதீன் சோஸ் ஆகியோர் மீது அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

    English summary
    Jammu & Kashmir is an integral part of India and the BJP will never allow it to be break away from the country, party president Amit Shah in Saturday said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X