For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி, பீகாரில் அதிக தொகுதிகளை பாஜக கைப்பற்றும்- ஏ.பி.பி.- நீல்சன் கருத்து கணிப்பு

By Mathi
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் நாட்டில் அதிக தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று ஏ.பி.பி.- நீல்சன் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் 80. பீகாரில் 40 தொகுதிகள் என மொத்தம் இந்த இரு மாநிலங்களில் மட்டும் 120 தொகுதிகள் இருக்கின்றன. இந்த இரு மாநிலங்களும் மத்தியில் யார் ஆட்சியை அமைப்பது என்பதில் தீர்மானிக்கக் கூடிய முக்கிய சக்திகளாக இருக்கின்றன.

இந்த இரு மாநிலங்களிலும் ஏ.பி.பி. மற்றும் நீல்சன் நிறுவனம் இணைந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இதில் பாரதிய ஜனதா கட்சியே இரண்டு மாநிலங்களிலும் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் பாஜகவுக்கு 40

உ.பி.யில் பாஜகவுக்கு 40

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 40ஐ பாஜக கைப்பற்றக் கூடுமாம். இம்மாநிலத்தில் 2009 தேர்தலில் பாஜக 10 தொகுதிகளைத்தான் கைப்பற்றியிருந்தது.

சமாஜ்வாடி, பகுஜனுக்கு பின்னடைவு

சமாஜ்வாடி, பகுஜனுக்கு பின்னடைவு

பாஜக விஸ்வரூபமெடுத்திருப்பதால் 2009 தேர்தலில் 20 தொகுதிகளைக் கைப்பற்றிய பகுஜன் சமாஜ் கட்சிக்கு இம்முறை 13 முதல் 15 தொகுதிகள்தான் கிடைக்குமாம். அதேபோல் கடந்த தேர்தலில் 23 தொகுதிகளைக் கைப்பற்றிய சமாஜ்வாடிக்கு இம்முறை 14 தான் கிடைக்குமாம்.

உ.பி.யில் காங்கிரஸ்

உ.பி.யில் காங்கிரஸ்

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கு 11 இடம் கிடைக்குமாம்.

பீகாரிலும் பாதிக்கு பாதி பாஜகவுக்கு

பீகாரிலும் பாதிக்கு பாதி பாஜகவுக்கு

பீகார் மாநிலத்தில் 40 தொகுதிகளில் 21 தொகுதிகள் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு. ஆனால் கடந்த மாதம் நடந்த கருத்து கணிப்பில் பா.ஜ.க.வுக்கு பீகாரில் 24 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய ஜனதா தளத்துக்கு 9தான்

ஐக்கிய ஜனதா தளத்துக்கு 9தான்

கடந்த தேர்தலில் 20 தொகுதிகளைக் கைப்பற்றிய ஐக்கிய ஜனதா தளத்துக்கு இம்முறை 9 தான் கிடைக்குமாம்.

காங்கிரஸுக்கு இப்பவும் 2தான்

காங்கிரஸுக்கு இப்பவும் 2தான்

பீகாரில் காங்கிரஸ் கட்சி 2009-ல் 2 தொகுதிகளைத்தான் கைப்பற்றியிருந்தது. இப்போதும் அதே 2 தான் கிடைக்குமாம்.

ராஷ்டிரிய ஜனதா தளம்..

ராஷ்டிரிய ஜனதா தளம்..

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 2009 தேர்தலில் 4 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. இம்முறை 5 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்.

பஸ்வான் கட்சி..

பஸ்வான் கட்சி..

பீகாரில் ராம்விலாஸ் பஸ்வானின் கட்சி கடந்த முறையைப் போலவே இம்முறையும் ஒரே ஒரு இடத்தில்தான் வெல்லுமாம்.

English summary
An ABP News-Nielsen opinion poll has predicted the Bharatiya Janata Party (BJP) is likely to win 40 Lok Sabha seats in Uttar Pradesh (UP) and 21 in Bihar if the Lok Sabha elections were to be held now. The poll claims the party is gradually gaining ground in the two states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X