ஓயாத எல்லை மோதல்.. அஸ்ஸாமில் மிசோரம் டிரக்குகள் மீது பயங்கர கொலைவெறித் தாக்குதல்!
குவஹாத்தி: அஸ்ஸாம்- மிசோரம் இடையேயான எல்லை மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அஸ்ஸாமில் மிசோரம் மாநிலத்துக்கு சென்ற 4 டிரக்குகள் வழிமறித்து தாக்கப்பட்டதால் இரு மாநிலங்களிடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
Recommended Video
அஸ்ஸாம்- மிசோரம் இடையேயான எல்லை மோதலின் உச்சமாக கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி இரு மாநில போலீசார் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் அஸ்ஸாமை சேர்ந்த 6 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்ட அஸ்ஸாம் போலீசார் படுகாயமடைந்தனர்.
இதனால் அஸ்ஸாமில் மிசோரம் மக்கள் மீது கடும் கோபம் பரவியது. அத்துடன் மிசோரம் செல்லக் கூடிய தேசிய நெடுஞ்சாலையையும் இழுத்து மூடினர் அஸ்ஸாம் மக்கள். மிசோரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. அஸ்ஸாமின் இந்த அறிவிக்கப்படாத பொருளாதார தடை மிசோரமில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்கள் யாரும் மிசோரம் செல்ல வேண்டாம் என அஸ்ஸாம் முதல்வர் ஹிம்ந்த பிஸ்வா சர்மா அறிவித்திருந்தார். இதனால் அஸ்ஸாம் எல்லையில் சாலைகளை மறித்தவர்கள் குதூகலமடைந்தனர். இதனைத் தொடர்ந்து இரு மாநில எல்லை பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அஸ்ஸாம் முதல்வர் அட்வைஸ்
இதன் ஒரு பகுதியாக மிசோரம் மாநிலத்துக்கு யாரும் செல்ல வேண்டாம் என்கிற தடையை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விலக்கிக் கொண்டார். மேலும் மிசோரம் செல்லும் வாகனங்களை பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். முன்னதாக ஹிமந்த பிஸ்வா சர்மா மீது போட்ட கொலை முயற்சி வழக்கை மிசோரம் திரும்பப் பெற்றிருந்தது. இந்த நடவடிக்கைகளால் இரு மாநிலங்களிடையே இயல்பு நிலை திரும்பக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

டிரக் மீது தாக்குதல்
இந்நிலையில் மிசோரம் நோக்கி அஸ்ஸாமின் சச்சார் மாவட்டத்தின் வழியாக 4 டிரக்குகள் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன. இந்த டிரக்குகளை வழிமறித்த அப்பகுதி மக்கள் விசாரித்திருக்கின்றனர். மிசோரம் மாநிலத்துக்கு முட்டைகள் கொண்டு செல்வதாக டிரக்குகளின் ஓட்டுநர்கள் கூறியதுதான் தாமதம்.. ஆவேசமான அந்த பகுதியினர் டிரக்குகளை அடித்து நொறுக்கினர். முட்டைகளை மொத்தமாக எடுத்து வந்து சாலையில் கொட்டினர்.

மிசோரம் கோரிக்கை
இந்த சம்பவத்தால் அஸ்ஸாம்- மிசோரம் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது மிசோரம் அரசு. மேலும் எல்லை பிரச்சனைக்கு அமைதி வழியில்தான் தீர்வு காண வேண்டும் என்கிறது மிசோரம். அஸ்ஸாம்- மிசோரம் எல்லை மோதலின் பதற்றம் இன்னமும் தணியாமல் இருக்கிறது. இரு மாநில எல்லைகளும் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி போல ஆயுதப் படையினர் பாதுகாவலுடன் இருக்கிறது. மிசோரம் மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாது என்பதில் அஸ்ஸாமியர்கள் தீவிரமாக இருக்கின்றனர். இந்த நிலைமை நீடித்தால் வங்கதேசம், மியான்மரில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வோம் என்கின்றனர் மிசோரம் மக்கள்.

நாகாலாந்து- அஸ்ஸாம் ஒப்பந்தம்
அஸ்ஸாமைப் பொறுத்தவரையில் மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சல் பிரதேசம் என அனைத்து வடகிழக்கு மாநிலங்களுடனும் எல்லை மோதல் இருந்து வருகிறது. மேகாலயாவுடன் 12 இடங்களில் எல்லை மோதல்கள் இருக்கின்றன. இது தொடர்பாக அஸ்ஸாம், மேகாலயா முதல்வர்கள் 2 கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துள்ளனர். மேலும் இரு மாநில எல்லை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் அஸ்ஸாம்- நாகாலாந்து மாநில அரசுகள் எல்லைகளில் பதற்றத்தை குறைக்கும் ஒபப்ந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இதன்படி இருமாநில போலீசாரும் எல்லை பாதுகாப்பு பணியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை என்பதால் இந்த எல்லை மோதல்கள் தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கின்றன. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வடகிழக்கு மாநிலங்களில் பயணம் செய்திருந்தார். அப்போது அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது எல்லை பிரச்சனைகளுக்கு அறிவியல் ரீதியாக, அனைத்து தரப்பும் ஏற்கக் கூடிய தீர்வை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அமித்ஷா வந்துவிட்டு சென்ற 2 நாட்களிலேயே அஸ்ஸாம்- மிசோரம் மோதல் வெடித்துவிட்டது. அஸ்ஸாமில் இப்போது பாஜகவின் கை ஓங்கி உள்ளது. அதனால் எல்லை பிரச்சனைகளுக்கு சுமூகத் தீர்வு காண வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications