For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவின் எல்லை ஊடுருவல்கள், விசா அணுகுமுறை கவலை தருகிறது: பிரதமர் மோடி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவின் எல்லை ஊருவல்கள் மற்றும் விசா அணுகுமுறைகள் கவலைதரக் கூடியதாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா வருகை தந்துள்ள சீனா அதிபர் ஜின்பிங்குடன் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.

Border peace needed to realise China ties: Modi

இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. இப்பேச்சுவார்த்தையின் முடிவில் இருநாடுகளிடையேயே மொத்தம் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதன் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  • ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே ஜின்பிங்கின் இந்தியா வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
  • இந்தியாவின் மிக முக்கிய அண்டை நாடாக திகழ்கிறது சீனா.
  • எல்லையில் அமைதி நிலையை ஏற்படுத்துவது மிக முக்கியம்.
  • அகமதாபாத்திலும் டெல்லியிலும் அனைத்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தோம்
  • கவுரவத்துடனும் நம்பிக்கையின் அடிப்படையிலும் இருதரப்பு உறவு அமைய வேண்டும்
  • உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் சீனாவின் முதலீட்டை வரவேற்கிறோம்
  • சீனாவுடன் மக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
  • 5 ஆண்டுகளில் 2 தொழில் பூங்காக்களை 20 பில்லியன் டாலரில் இந்தியாவில் அமைக்கிறது சீனா.
  • நாதுலா கணவாய் வழியாக மானசரோவர் செல்வதற்கான புதிய பாதை அமைக்க சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
  • எல்லையில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் கவலைக்குரியது- இவற்றுக்குத் தீர்வு காண வேண்டும்.
  • எல்லையில் நட்பும் அமைதியும் மிகவும் முக்கியமானது,
  • சீனாவின் விசா அணுகுமுறை வருத்தம் அளிக்கிறது. இதற்கும் தீர்வு காணப்பட வேண்டும்.
  • சர்வதேச பிரச்சனைகளில் இருதரப்பும் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் சீனா அதிபர் ஜின்பிங் செய்தியாளர்களிடம் பேசினார்.

English summary
Prime Minister Narendra Modi said on Thursday that peace on the border with China was vital to developing relations, as a standoff between troops on their disputed border overshadowed a visit by President Xi Jinping.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X