For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழுக்கு துணி.. பரட்டைதலை.. நுனி நாக்கில் ஆங்கிலம்.. அரள வைத்த பிச்சைக்காரர்.. யார்னு பார்த்தா..ஷாக்!

பூரி ஜெகன்னாதர் கோயில் வாசலில் பட்டதாரி பிச்சை எடுத்து வருகிறார்

Google Oneindia Tamil News

புரி: அழுக்கு துணி, பரட்டை தலையுடன் இருக்கும் இவர் ஒரு பிச்சைக்காரர்.. கோயில் வாசலில் பிச்சை எடுக்கிறார்.. ஆனால் திடீரென ஒரு தகராறு வந்துவிடவும், இந்த ஆசாமி வாயை திறந்து பேச ஆரம்பித்தார் பாருங்க.. ஓவர் நைட்டில் ஓவர் ஃபேமஸ் ஆகிவிட்டார்!

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகன்னாதர் கோயில் பிரசித்தி பெற்றது.. இந்த கோயிலின் வளாகத்தில் ஏராளமான பிச்சைக்காரர்கள் எப்போதுமே இருப்பார்கள். இதில் ஒருவர்தான் கிரிஜா சங்கர் மிஸ்ரா.

பிச்சை எடுப்பதற்கென்றே வழக்கமாக ஒரு இடம் இவருக்கு இருக்கும்.. யாரிடமும் பேசமாட்டார்.. அமைதியாக போய் அந்த இடத்தில் உட்கார்ந்து பிச்சை எடுப்பார்.

கிரிஜா சங்கர்

கிரிஜா சங்கர்

அப்படிதான் பிச்சை எடுக்க வரும் பாது, தன் இடத்தில், ஒரு ரிக்‌ஷாக்காரர் வண்டியை நிறுத்தி வைத்திருந்து இருக்கிறார்.. அதனால் ரிக்‌ஷாவை எடுக்க சொல்லி சைகையிலேயே கிரிஜா சங்கர் கேட்டுக் கொள்ள, அதற்கு அந்த நபர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு பிறகுதான் வாயை திறந்து சத்தம் போட்டு பேச ஆரம்பித்தார் கிரிஜா சங்கர்.. இரு தரப்பிலும் மாறி மாறி வார்த்தைகள் வந்து விழுந்தனவே தவிர, அந்த ரிக்‌ஷாவை அங்கிருந்து எடுக்கவில்லை.

ஆத்திரம்

ஆத்திரம்

ஒரு கட்டத்தில் ஆத்திரமும், ஆவேசமும் அடங்காத பிச்சைக்காரர், ரிக்ஷாக்காரரை பலமாக தாக்கிவிட்டார்.. இதில் அவருக்கு ரத்தம் பொலபொலவென கொட்ட தொடங்கியது. கோயில் வாசலிலேயே அந்த இடம் ரணகளமாகிவிட்டது.. விஷயம் அறிந்து போலீசார் வந்துவிட்டனர்.. 2 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்... 2 பேரையும் புகார் எழுதி தருமாறு சொன்னார்கள்.

என்ஜினியர்

என்ஜினியர்

அப்போதுதான், கிரிஜா சங்கர், அந்த பேப்பரில் கடகடவென இங்கிலீஷில் புகார் எழுதினார்.. சரளமாகவும், வேகமாகவும் அந்த புகாரை எழுதி தள்ளினார். இதை பார்த்து போலீசார் அரண்டு போய்விட்டனர்.. வந்த புகாரை விட்டுவிட்டு, அவர் யார் என்ற விசாரணையில் இறங்கிவிட்டனர்.. அப்போதுதான் அவர் ஒரு என்ஜினியர் என்று தெரியவந்தது. புவனேஸ்வரை சேர்ந்த ஓய்வுபெற்ற டிஎஸ்பியின் மகன்தான் இந்த கிரிஜா சங்கர்.. பிஎஸ்சி படித்த அவர், டிப்ளமோ என்ஜினியரிங் முடித்திருக்கிறார். படித்து முடித்துவிட்டு, மும்பையில் ஒரு பிரபல கம்பெனியில் வேலையிலுவம் இருந்திருக்கிறார்.

குடும்பத்தினர்

குடும்பத்தினர்

அந்த சமயத்தில்தான் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.. அதற்கு பிறகு புரிக்கு வந்து பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டார்.. இந்த தகவல்களை கேட்டு போலீசார் ஆச்சரியப்பட்டனர்.. இப்போது குடும்பத்தினரிடம் கிரிஜா சங்கரை ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

டிப்ளமோ

டிப்ளமோ

"இவ்வளவு படிச்சிட்டு ஏன் இப்படி பிச்சை எடுக்கறீங்கன்னு" கேட்டால், அது என் சொந்த விஷயம்.. பிஎஸ்சி முடிச்சிட்டு டிப்ளமோ என்ஜினியரிங் படிச்சேன்.. ஒரு ஆபீசில் வேலை பார்த்தேன்.. ஆனால் என் சீனியர்களுடன் எப்பவுமே எனக்கு ஆபீசில் தகராறு.. மனசெல்லாம் வலி.. அதான் அந்த வேலையை விட்டுட்டு வந்துட்டேன்.. இன்னும் என் மனசு ரணமாதான் இருக்கு" என்றாராம்.

நிலா வெளிச்சம்

நிலா வெளிச்சம்

பிச்சை எடுக்கும் இடத்தில் இவர் எப்படி இருப்பார் என்று அடுத்தகட்ட விசாரணையில் ஆர்வத்துடன் போலீசார் இறங்கினர்.. நைட் நேரத்தில் நிலா வெளிச்சத்தில், இங்கிலிஷ் நியூஸ் பேப்பர்களை விடிய விடிய படிப்பாராம் கிரிஜா சங்கர்.. இதை கேட்டதும் போலீசாருக்கு தலையே சுற்றிவிட்டது.. பல பல ஆச்சரியங்களை தனக்குள் ஒளித்து வைத்துள்ளார் இந்த கிரிஜா சங்கர்!

இளமையில் கல்

இளமையில் கல்

எதற்கோ தகராறு செய்ய போய்.. கடைசியில் சரளமான இங்கிலீஷால் அடையாளம் காணப்பட்டுள்ளார் இந்த என்ஜினியரிங் படித்த நபர்.. இந்த வருடம்கூட, என்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் பலரும் உரிய வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வருந்தத்தக்க ஒன்றுதான்.. என்றாலும், இளமையில் கற்ற கல்வி ஒருவரை எப்போதுமே கைவிடாது என்று நம் பெரியவர்கள் சொல்லி வைத்தது, கிரிஜா சங்கர் விஷயத்தில் எவ்வளவு பெரிய உண்மை!

English summary
btech graduates original face of a beggar in front of the puri jagannathar temple odisha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X