For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் மரண அடி வாங்கிய பாஜக- அதிர்ச்சியில் முதல்வர் வசுந்தரராஜே

By Mathi
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: பாரதிய ஜனதாவின் கோட்டையாக கருதப்பட்ட ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்து முதல்வர் வசுந்தரராஜேவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா ஆளும் ராஜஸ்தானில் ராஜஸ்தானில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 13ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

சட்டசபை தேர்தலில்..

சட்டசபை தேர்தலில்..

கடைசியாக நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளில் 162 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

லோக்சபா தேர்தலில்..

லோக்சபா தேர்தலில்..

லோக்சபா தேர்தலில் 25 தொகுதியையும் தன்வசப்படுத்திக் கொண்டது.

இடைத்தேர்தலில்

இடைத்தேர்தலில்

ஆனால் தற்போது நடந்த 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

அதிர்ச்சியில் முதல்வர்

அதிர்ச்சியில் முதல்வர்

மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், சுராஜ்கார்க், வீர் மற்றும் நாஷிராபாத் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த 3 தொகுதிகளுமே பாஜக வசம் இருந்தவை என்பதால் இந்த தோல்வி முதல்வர் வசுந்தரராஜே சிந்தியாவுக்கு கடும் அதிர்ச்சி அளித்துள்ளது.

தனித்துவமான வெற்றி- பைலட்

தனித்துவமான வெற்றி- பைலட்

காங்கிரஸ் கட்சியின் வெற்றி தனித்துவமான வெற்றி என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

English summary
Opposition Congress candidates are leading in three out of the four Assembly constituencies in Rajasthan where bypolls were held.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X