டெல்லி ஏர்போர்ட்டில் 6 விமானங்களில் குண்டு வெடிக்கும்: போன் மூலம் மிரட்டல்
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஜெட் ஏர்வேஸ் உள்பட 6 விமானங்களில் குண்டு வைக்கப்பட்டதாக வந்த போன் அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேற்கு டெல்லியில் இருக்கும் பஷிம் விஹார் பகுதியில் செயல்படும் ஹோட்டல் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு போன் அழைப்பு வந்துள்ளது. எடுத்துப் பேசியபோது மறுமுனையில் பேசியவர் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஜெட் ஏர்வேஸ் உள்பட 6 விமானங்களில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

உடனே இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து கிளம்பவிருந்த விமானங்களில் குண்டு ஏதாவது உள்ளதா என்று தீவிர சோதனை செய்யப்பட்டது. சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை. அந்த நபர் பொய் சொல்லியது தெரிய வந்தது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களுக்கு பலமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த 22ம் தேதி பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்த சில மணிநேரத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 23ம் தேதி 11 இன்டிகோ விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக அமெரிக்காவில் இருந்து வந்த போன் அழைப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications