சன்னி லியோனை அடுத்து டாப் லிஸ்ட்டில் இடம் பெற்ற பிரபலம்.. வாயடைத்து போன மாணவர்கள்.. யார் தெரியுமா?
கொல்கத்தா: பாலிவுட் நடிகை சன்னி லியோன் மற்றும் பாடகி நேஹா கக்கரை தொடர்ந்து ஜப்பானிய பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான ஷிஞ்சான் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில பிஎஸ்சி ஹான்ர்ஸ்சில் பட்டம் பெற்று டாப் லிஸ்டில் இடம் பிடித்து இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த குறும்புத்தனமான செயலை கண்டுபிடித்த கல்லூரி போலீசில் புகார் அளித்தது. அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் உள்ள கல்லூரிகளில் பாலிவுட் நடிகர் சன்னி லியோன் மற்றும் பாடகி நேஹா கக்கரை உளளிட்டோருக்கு பட்டப்படிப்பு முடித்தாக ஏற்கனவே குறும்புத்தனமான சர்ச்சைகள் வெளியானது. அந்த வரிசையில் ஜப்பானிய பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான ஷிஞ்சன் நோஹாராவும் மேற்கு வங்கத்தில் பட்டம் பெற்றிருக்கிறார். அதுவும் முதலிடம் பெற்றது பலரும் வாயடைத்து போயினர்.

வடக்கு வங்காளத்தின் சிலிகுரி கல்லூரியில் பிஎஸ்சி (ஹானர்ஸ்) பட்டியலில் ஷிஞ்சனின் பெயர் டாப் லிஸ்டில் தோன்றியது .இது பற்றி புகார் வரவே உடனே பெயர் அகற்றப்பட்டு கல்லூரி இணையதளத்தில் ஒரு புதிய பட்டியல் போடப்பட்டது. இது ஒரு தவறான செயல் என்பதால் நாங்கள் போலீஸில் புகார் அளித்துள்ளது என்று கூறியது கல்லூரி நிர்வாகம்.
ஆன்லைன் அப்ளிகேசனின் போது தேர்வு எழுதிய மாணவர்கள் அளித்த விவரங்களின் அடிப்படையில் தகுதி பட்டியலை தொகுக்கும் செயல்முறையை கல்லூரி நிர்வாகம் ஒரு நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்திருந்தது. அங்கு தான் இந்த தவறு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு மாணவர்களின் விவரங்களை ஆராய்வோம் என கல்லூரி அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக மேற்கு வங்க மாநிலம் மால்டாவின் மாணிக்கக் கல்லூரியின் பி.ஏ ஆங்கிலம் (ஹானர்ஸ்) தகுதி பட்டியலில் பாடகி நேஹா கக்கரின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதேபோல் நடிகை சன்னி லியோனுக்கு மூன்று கல்லூரிகள் பட்டம் கொடுத்ததாக சர்ச்சை வெளியானது. இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிய நான்கு கல்லூரிகளும் காவல்துறையின் சைபர் பிரிவில் புகார் அளித்துள்ளன.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications