11 வயது சிறுமியுடன் திருமணம்: பாஜக தலைவர் மகன் மீது போலீசார் வழக்கு
ராஞ்சி: ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. தலைவர் தலா மராண்டியின் மகன் முன்னா 11 வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக இருப்பவர் தலா மராண்டி. இவரது மகன் முன்னா, கோட்டா என்னும் நகரில் கடந்த மாதம் 27ஆம் தேதியன்று 11 வயது சிறுமியை திருமணம் செய்ததாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிறார் திருமண தடுப்பு அமைப்பினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் கோட்டா நகர போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி தலா மராண்டி, முன்னா, சிறுமியின் தந்தை பகன் பாஸ்கி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முன்னதாக, மற்றொரு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னா மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில், முன்னா கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது












Click it and Unblock the Notifications