காவிரி: நாளை வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும்.. நீர்வளத்துறை செயலாளர் உறுதி

காவிரிக்கான வரைவு திட்டம் நாளை உச்ச நீதிமன்றத்தில் கண்டிப்பாக தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது- வீடியோ

    டெல்லி: காவிரிக்கான வரைவு திட்டம் நாளை உச்ச நீதிமன்றத்தில் கண்டிப்பாக தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கூட இன்னும் வாரியம் அமைக்கவில்லை. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.

    Cauvery: All set to submit scheme in SC says Central Water Resources Secretary

    கடந்த விசாரணையில் தமிழகத்திற்கு மே மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.ஆனால் தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அறிக்கை அளித்துள்ளது.

    கர்நாடகா இப்படி மோசமாக பதில் அளித்துள்ள நிலையில் மத்திய அரசும் மூன்றாவது முறையாக காவிரி செயல்திட்டம் அமைக்க கூடுதல் அவகாசம் கேட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் கொடுத்த அவகாசம் நாளை முடிகிறது.

    இந்த நிலையில் நாளை கண்டிப்பாக காவிரிக்கான வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் நாளை கண்டிப்பாக திட்டம் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    முதலில் இந்த திட்டம் தயார், ஆனால் கர்நாடக தேர்தல் காரணமாக திட்டத்தில் ஒப்புதல் பெற முடியவில்லை என்று கூறி இருந்தனர். ஆனால் இப்போதும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டதா என்பதை கூற முடியாது என்று நீர்வளத்துறை செயலாளர் குறிப்பிட்டு உள்ளார்.

    தேர்தல் முடிந்த கையோடு பிரதமர் மோடி நேபாளத்திற்கு ஆன்மீக பயணம் சென்றுவிட்டார். இதற்கு இடைப்பட்ட சில மணி நேரங்களில் மோடியிடம் காவிரி செயல் திட்டத்திற்கு கையெழுத்து வாங்கினார்களா என்ற நாளைதான் தெரிய வரும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+