CBSE Results 2025: சிபிஎஸ்இ முடிவுகள் இன்றோ நாளையோ வெளியாக வாய்ப்பு.. எளிதாக பார்ப்பது எப்படி?
டெல்லி: சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியாக உள்ள சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் பார்க்கலாம்.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் 2025ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காடததிருக்கின்றனர். இந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பான முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பொதுவாக, சிபிஎஸ்இ தேர்வுகள் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 18 வரை நடைபெற்றன. 12ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தாண்டு, சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை 42 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
சிபிஎஸ்இ நிர்வாகம் 2025ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே 15-ம் தேதிக்குள் வெளியிட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இருப்பினும், சரியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் இருந்து இன்றோ அல்லது நாளையோ வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தேர்வு முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் bse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது முடிவுகளை சரிபார்க்கலாம்.
மேலும், மாணவர்கள் டிஜிலாக்கர் (DigiLocker) செயலி மற்றும் உமாங் (UMANG) செயலி மூலமாகவும் தங்களது டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன், எஸ்எம்எஸ் (SMS) மூலமாகவும் முடிவுகளை தெரிந்துகொள்ளும் வசதி வழங்கப்படலாம்.
CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ள மாணவர்கள் தங்கள் முடிவுகளை IVRS மூலம் தெரிந்துகொள்ளலாம். குரல் அமைப்பு மூலம் முடிவுகளை தெரிந்துகொள்ள, மாணவர்கள் கொடுக்கப்பட்ட எண்ணுக்கு முன்னர் தங்கள் பகுதியின் குறியீட்டுடன் - 24300699 என்ற எண்ணை டயல் செய்ய வேண்டும்.
தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கு மாணவர்கள் தங்களது தேர்வு நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ரோல் நம்பர், பள்ளி எண், அனுமதி அட்டை ஐடி மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை தயாராக வைத்திருப்பது அவசியம்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிபிஎஸ்இ இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications