For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசு, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது.. லோக்சபாவில் அதிமுக குற்றச்சாட்டு

மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது என அதிமுக எம்பி வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது என அதிமுக எம்பி வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு கட்சிக்கும் பேசுவதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸை தொடர்ந்து அதிமுகவுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது. அதிமுக எம்பி வேணுகோபால் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பேசினார்.

 மாற்றாந்தாய் மனப்பான்மை

மாற்றாந்தாய் மனப்பான்மை

அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சில மாநிலங்களை நடத்துவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கவில்லை.

யூஜிசியை கலைக்க வேண்டாம்

யூஜிசியை கலைக்க வேண்டாம்

மற்ற மாநிலங்களை விடவும் தமிழகத்திற்கு குறைவான நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது.ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான உதவித் தொகையை விடுவிக்க வேண்டும். யூஜிசி சிறப்பாக செயல்பட்டு வருதால் அதனை கலைக்க வேண்டாம்.

மத்திய அரசுக்கு நன்றி

மத்திய அரசுக்கு நன்றி

காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தற்கு மத்திய அரசுக்கு நன்றி. காவிரியில் கர்நாடகா முறையாக தண்ணீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதிமுக எம்பி வேணுகோபால் பேசினார்.

மக்களே முடிவு செய்வார்கள்

மக்களே முடிவு செய்வார்கள்

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால் ஆட்சி குறித்து மக்களே முடிவு செய்வார்கள். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதிமுக எம்பி வேணுகோபால் பேசினார்.

English summary
ADMK MP Venugopal says Central govt is treating Tamilnadu like step mother. He thanked central govt for set up Cauvery Management commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X