ஒடிஷா- சத்தீஸ்கர் மகாநதி நீர் பிரச்சனை-உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடுவர் மன்றம் அமைத்த மத்திய அரசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிஷா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு இடையே மகாநதி நீரை பகிர்ந்து கொள்வதற்காக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடுவர் மன்றத்தை அமைத்துள்ளது மத்திய அரசு.

ஒடிஷா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் மகாநதி நீரை பகிர்வதில் பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கில் நடுவர் மன்றத்தை அமைக்க உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி உத்தரவிட்டிருந்தது.

Centre forms Mahanadi Tribunal for Odisha-Chhattisgarh water dispute

இதையடுத்து தற்போது மத்திய அரசு 3 நீதிபதிகளைக் கொண்ட நடுவர் மன்றத்தை அமைத்துள்ளது. நீதிபதி கான்வில்கர் தலைமையிலான இந்த நடுவர் மன்றத்தி நீதிபதிகள் ரவி ரஞ்சன், இந்தர்மீத் கவுர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

1956-ம் ஆண்டு சட்டத்தின் படி இந்த நடுவர் மன்றமானது 3 ஆண்டுகளுக்குள் தமது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் நடுவர் மன்றம் தமது பணியை நீட்டித்துக் கொள்ளலாம்.

இந்த நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதன் மூலமாக ஒடிஷா, சத்தீஸ்கர் இடையேயான நீண்டகால நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Centre constituted a three-member Mahanadi Water Disputes Tribunal to sort out the water dispute between Odisha and Chhattisgarh.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற