For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுபாஷ் சந்திர போஸ் அலங்கார ஊர்திக்கு திடீர் தடை.. கடும் அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி.. என்ன நடந்தது?

பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: குடியரசு தினத்தன்று, மேற்கு வங்காளத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது... இதையடுத்து, மறுபரிசீலனை செய்து மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி அணிவகுப்பு நடைபெறுகிறது... வழக்கமாக, இந்த விழாவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறும்..

அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தலைவர்களை நினைவுகூர்ந்து அல்லது தேசபக்தியை விளக்கும் வகையில் இந்த அலங்கார ஊர்திகள் அலங்காரம் செய்யப்படும்.

 நேதாஜிக்கு கவுரவம்.. இனி நேதாஜி பிறந்த நாளில் தொடங்கும் குடியரசு தின கொண்டாட்டம்.. முக்கிய முடிவு நேதாஜிக்கு கவுரவம்.. இனி நேதாஜி பிறந்த நாளில் தொடங்கும் குடியரசு தின கொண்டாட்டம்.. முக்கிய முடிவு

 சுபாஷ் சந்திர போஸ்

சுபாஷ் சந்திர போஸ்

அந்த வகையில், இந்த முறையும், டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது... ஆனால், மேற்கு வங்காளத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி மேற்கு வங்கத்தின் சார்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்தி ஒன்றும் சிறப்பாக தயார் செய்யப்பட்டுள்ளது... ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடிதம்

கடிதம்

இதனால், அதிருப்தி அடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ளதாவது: இந்த முடிவால் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மத்திய அரசின் இந்த அணுகுமுறையால் மேற்கு வங்க மக்கள் அனைவரும் மிகவும் வேதனையடைந்துள்ளனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வங்கம் முன்னணியில் இருந்தது மற்றும் பிரிவினையின் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காக மிகப்பெரிய விலையை செலுத்தியுள்ளது.

 மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

நேதாஜி மற்றும் நாட்டின் சுதந்திரத்துக்கு அர்ப்பணித்த சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் மேற்கு வங்க அரசின் அலங்கார ஊர்திக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது... இதற்கு என்ன காரணம் என்றும் சொல்லப்படவில்லை.. அதனால், மத்திய அரசு இதுகுறித்து மறுபரிசீலனை செய்து குடியரசு தினவிழாவில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 4வது முறை

4வது முறை

ஆனால், இப்படி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இது முதல் முறை கிடையாது.. ஏற்கனவே 3 முறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. இது 4வது முறையாகும்.. 2015, 2017, 2020 ஆண்டுகளில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் இப்படித்தான், மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

அதேபோல, கேரள மாநிலத்தின், ஸ்ரீ நாராயண குருவின் அலங்கார ஊர்திக்கும் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது... ஸ்ரீ நாராயண குரு என்பவர்தான், ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்ற தத்துவத்தை வலியுறுத்தியவர்... இவரின் அலங்கார ஊர்தியும் திடீரென நிராகரிக்கப்பட்டுவிட்டது.. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. எனவே, கேரளாவை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

English summary
Centres reject West bengals Subash chandra bose tableau from republic day parade and mamta writes to PM Modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X