For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா தான் உலகத்திலேயே முதல்முயற்சி .. இன்று காலை தொடங்கியது 'சந்திராயன் 2' கவுன்ட்டவுன்

Google Oneindia Tamil News

Recommended Video

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவுவது தற்காலிக நிறுத்தம்

    ஸ்ரீஹரிகோட்டா : நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் -2 விண்கலம் நாளை அதிகாலை விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.

    உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது. இதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி வந்தது. இந்நிலையில் இறுதிகட்ட பணிகள் முடிந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலதை விண்ணில் ஏவ இந்தியா தயாராகி வருகிறது. நாளை அதிகாலை 2.51 மணியளவில் 3850 கிலோ எடைகளுடன் சந்திராயன்-2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

    Chandrayaan-2, countdown started at 6.51 a.m in this morning

    இதற்கான கவுன்ட் டவுன் காலை 6.51 மணிக்கு தொடங்கியது. சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவ ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது. வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்ட உடன், இரண்டு மாத பயணங்களுக்கும் பின் சந்திராயன் -2 நிலவின் தென் துருவப் பகுதியை அடையும்.

    3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து நிலவை அடையப்போகிறது சந்திராயன் 2. இந்த சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்த 978 கோடி ரூபாயை இந்தியா செலவழித்துள்ளது. இதுவரை எந்த விண்கலமும் கால் பதிக்காத இடத்தை சந்திராயன் - 2 தனது தடத்தை பதிக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுவரை எந்த நாடும் இதற்காக முயற்சியில் இறங்கவில்லை . எனவே இந்த முயற்சியானது நிலவு குறித்த அறிவியலில் நிறைய புதிய தகவல்களை வெளி உலகுக்கு இந்தியா தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. சந்திராயன் -2 விண்கலத்தை விண்ணில் ஏவுவது என்பது இந்தியாவின் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க பணியாகும். இதன் மூலம் விண்வெளி துறையில் இந்தியா தனது அடுத்த மைல்கல்லை எட்டும்.

    English summary
    Chandrayaan-2, countdown started at 6.51 a.m in this morning , ISRO to launch moon landing mission at 2.51 a.m. on Monday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X