தமிழ்நாடு மட்டும் ஒரு பங்கா இருந்தா வளைச்சுடுவேன்... ரஜினி அரசியலுக்கு ஆனந்த் மஹிந்திராவின் பதில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : தமிழ்நாடு மட்டும் ஒரு பங்கா இருந்தால் அதை இப்பவே வாங்கி நீண்ட காலத்திற்கு வைத்துவிடுவேன் என்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா டுவீட்டியுள்ளார். ரஜினியின் அரசியல் அறிவிப்பை குறிப்பிட்டு ஆனந்த் மஹிந்திரா இவ்வாறு டுவீட்டியுள்ளார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியினர், விமர்சகர்கள், ஜோதிடர்கள், ரசிகர்கள் என்று கண்டம் விட்டு கண்டம் கடந்து ரஜினிக்கு எதிர்ப்பும் வரவேற்பும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். டுவிட்டரில் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும் ஆனந்த் மஹிந்திரா, நாட்டு நடப்புகள் குறித்த தனது கருத்துகளை அன்றாடம் பதிவிட்டு வருகிறார்.

ஆனந்த் மஹிந்திராவின் டுவீட்

இந்த முறை ரஜினியின் ஆன்மிக அரசியல் அறிவிப்பால் தனது கவனத்தை தமிழகம் பக்கம் திருப்பியுள்ள ஆனந்த் மஹிந்திரா. ரஜினி அரசியல் அறிவிப்பை ரிடுவீட் செய்து பதிவிட்டுள்ள கருத்தில் தமிழ்நாடு மட்டும் ஒரு பங்காக இருந்திருந்தால், அதை இப்போதே வாங்கிப் போட்டு நீண்ட காலத்திற்கு வைத்துக் கொள்வேன் என்று டுவீட்டியுள்ளார்.

பதில் கருத்து

ஆனந்த் மஹிந்திராவின் கருத்துக்கு பலரும் பதில்களையும் அளித்துள்ளனர். ஒருவேளை தமிழ்நாடு ஒரு பங்காக இருந்திருந்தால் ரஜினி அதனை சிரிப்பு பங்காக மாற்றி இருப்பார் என்று ஒருவர் பதில் டுவீட்டியுள்ளார்.

ரஜினிக்கு பலர ஆதரவு

அதே சமயம் ஒரு சிலர் ரஜினி நல்ல தலைவராக வந்து தமிழ்நாட்டை காப்பாற்றுவார் என்று கூறியுள்ளனர். ரஜினியால் தமிழக பொருளாதாரம் நிலையான சூழலுக்கு வரும் என்றும் கூறியுள்ளனர்.

விவாதமாக மாறிய டுவீட்

விவாதமாக மாறிய டுவீட்

ஆனந்த் மஹிந்திரா தமிழகம் குறித்தும், ரஜினி அரசியல் குறித்து பதிவிட்டுள்ள இந்த கருத்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியுள்ளது. அதே சமயம் இது நல்ல விவாத தலைப்பாகவும் நெட்டிசன்கள் மத்தியில் மாறியது என்றே சொல்ல வேண்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mahindra and Mahindra group Chairman Anand Mahindra retweeted for Rajini's political entry as "If Tamil Nadu was a Stock, I would be bullish and going long on it right now"

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X