For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாதுகாப்பு வேண்டும்.. சபரிமலைக்கு 60 பெண்களுடன் வருகிறோம்.. கேரளா முதல்வருக்கு வந்த இ-மெயில்!

சபரிமலைக்கு 60 இளம் பெண்களுடன் வர இருப்பதால், உரிய பாதுகாப்பு வழங்கும்படி சென்னையைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு கேரளா முதல்வருக்கு இ மெயில் அனுப்பி உள்ளது.

Google Oneindia Tamil News

சபரிமலை: சபரிமலைக்கு 60 இளம் பெண்களுடன் வர இருப்பதால், உரிய பாதுகாப்பு வழங்கும்படி சென்னையைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு கேரளா முதல்வருக்கு இ மெயில் அனுப்பி உள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்ககூடாது என எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவை முடங்கி போனது. ஆனால் இதுவரை எந்த பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

Chennai Manithi organization decides to visit Sabarimala with 60 young women

இந்தநிலையில் மனிதி பெண்கள் அமைப்பு அனுப்பியுள்ள இ மெயிலில் கூறியிருப்பதாவது: 200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் அமைப்பில் உள்ளனர். பெண்கள் உரிமையை நிலை நாட்ட வருகிற 23ம் தேதி 60 பெண்களுடன் வர உள்ளோம்.

எனவே, எங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவல், டிஜிபிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் சற்று அமைதி திரும்பிய நிலையில் மீண்டும் பெண்கள் வர இருப்பதாக கூறியிருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் உறுதியாக இருந்து வருகிறார். அதற்கு தகுந்தாற்போல் போலீஸ் பாதுகாப்பும் பலத்தப்பட்டு உள்ளது.

English summary
Chennai 'Manithi' women's organization has sent 'e-mail' to Kerala Chief Minister for providing security, as the organization decides to visit Sabarimala with young women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X