பாஜகன்னா சும்மாவா..ஒரே ஒரு 'ஆப்’-ஒட்டுமொத்த ஆட்டத்துக்கும் ஆப்பு! தலைகீழான சத்தீஸ்கர் தேர்தல் களம்!
ராய்ப்பூர்: 5 மாநில தேர்தல்களில் தொடக்கம் முதலே அத்தனை தேர்தல் கருத்து கணிப்புகளிலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் என தெளிவான முடிவுகள் முன்வைக்கப்பட்டன. இப்போது முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் ஒட்டுமொத்த தேர்தல் களத்தையே ஒரே ஒரு சூதாட்ட ஆப் விவகாரத்தை முன்வைத்து தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கிறது பாஜக.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். சத்தீஸ்கரில் முதல் கட்டமாக நாளை 20 தொகுதிகளுக்கும் நவம்பர் 17-ல் எஞ்சிய 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

சத்தீஸ்கர் கருத்து கணிப்புகள்: சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசுதான் மீண்டும் ஆட்சி அமைக்கும்; பாஜகவால் முந்தைய தேர்தலை விட சற்று கூடுதல் வாக்குகள் பெற முடியும் என்பதுதான் கருத்து கணிப்புகளின் பொதுவான முடிவுகள். தற்போதைய 5 மாநில தேர்தல்களில் சத்தீஸ்கரி மட்டுமே மீண்டும் காங்கிரஸ் ஆட்சி என தெள்ளத் தெளிவாக அனைத்து கருத்து கணிப்புகளும் ஆரூடம் தெரிவித்தன.
மகாதேவ் சூதாட்ட செயலி: இந்த நிலையில்தான் திடீரென மகாதேவ் சூதாட்ட செயலி (ஆப்) விவகாரத்தை முன்வைத்து சத்தீஸ்கரில் அமலாக்கத்துறையும் பாஜகவும் சடுகுடு ஆட்டம் ஆடி வருகின்றன. சத்தீஸ்கரில் மகாதேவ் சூதாட்ட ஆப் விவகாரத்தில் தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகளில் பல கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இது ஏதோ ஒரு மகாதேவ் சூதாட்ட செயலி ஆப் என ஒதுங்கி நிற்காதவகையில் அமலாக்கத்துறை அஸ்திரத்தை ஏவியது.
ரூ508 கோடி வாங்கினார் பூபேஷ் பாகல்?: மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ508 கோடி பணம் பெற்றார்; இதற்கான இ மெயில் ஆதாரங்கள் தங்களிடம் சிக்கிவிட்டது என சொன்னது அமலாக்கத்துறை. அப்புறம் என்ன பாஜக தம் பங்குக்கு சத்தீஸ்கர் களத்தில் அதகளப்படுத்துகிறது. பிரதமர் மோடி முதல் அத்தனை பேரும் சத்தீஸ்கர் முதல்வரை மகாதேவ் ஆப் விவகாரத்தில் போட்டு துவைத்து எடுத்து கொண்டிருக்கின்றனர். இப்போது தேர்தல் பிரச்சனைகளில் இருந்து விலகி மகாதேவ் ஆப் விவகாரத்துக்கு பதில் சொல்வதுதான் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் முதல் வேலையாகிவிட்டது.
450 பேர் கைது: இன்று கூட ராய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பூபேஷ் பாகல், மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரத்தில் மொத்தம் 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 72 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பணத்தையும் பறிமுதல் செய்திருக்கிறோம். ஆனால் மத்திய அரசு என்னதான் செய்தது? மகாதேவ் ஆப்பை முதலிலேயே தடை செய்ய வேண்டியது மத்திய அரசுதானே? ஏன் இதனை மத்திய அரசு செய்யவில்லை? மகாதேவ் ஆப் இயக்குநரை ஏன் முதலிலேயே மத்திய அரசு கைது செய்யவில்லை? மகாதேவ் ஆப் உரிமையாளர்களுக்கு நாங்கள்தான் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். இப்போது தேர்தல் நடக்கும் நேரத்தில் இந்த பிரச்சனையை தீவிரமாக்குவது எங்களது பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துவதாகும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்திருக்கிறோம். தேர்தல் ஆணையம் நடவடிக்கை என நம்புகிறோம் என்றார்.
முடக்கப்பட்ட பூபேஷ்: சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒட்டுமொத்தமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு ரேஸில் முந்திக் கொண்டிருந்தவர் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகல். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு மாகாதேவ் ஆப் மூலம் பாஜகவுக்கு பதில் சொல்வது மட்டுமே என்கிற பணியை நோக்கி திசை திருப்பிவிடப்பட்டிருக்கிறார் பூபேஷ் பாகல்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications