"கை, கால்களை கட்டி.." நள்ளிரவில் சுகாதார மையத்தில் புகுந்த மர்ம கும்பல்! நர்ஸ் கூட்டு பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

போபால்: சத்தீஸ்கரில் சுகாதார மையத்தில் செவிலியர் ஒருவருக்கு நேர்ந்துள்ள கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்தியாவில் பெண்களைக் குறி வைத்து நடத்தப்படும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் நன்கு தெரிந்த நபர்கள் மூலமே அரங்கேறுகிறது.

இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில் சுகாதார மையத்தில் செவிலியராக பணிபுரியும் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. அங்குச் செவிலியர் ஒருவர் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு கொடூரமாகக் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார்.. இந்தச் சம்பவத்தில் மொத்தம் 4 பேர் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், குற்றவாளிகளில் ஒருவர் 17 வயது மைனர் சிறுவன் என்ற அதிர்ச்சி தகவலையும் போலீசார் தெரிவித்தனர்.

 கூட்டு பலாத்காரம்

கூட்டு பலாத்காரம்

கடந்த வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது. அன்றைய தினம் சத்தீஸ்கர் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள சிப்சிபி என்ற கிராமத்தில் வழக்கம் போல பணியாற்றிக் கொண்டு இருந்து உள்ளார். அப்போது அங்கே உள்ளே நுழைந்த அந்த கும்பல் செவிலியரைக் கட்டி போட்டு, மாறி மாறி கூட்டுப் பலாத்காரம் செய்து உள்ளனர். அந்த செவிலியரைக் கூட்டுப் பலாத்காரம் செய்த அவர்கள், அதை வீடியோவாகவும் எடுத்து உள்ளனர்.

கைது

கைது

மேலும், இந்தச் சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விவோம் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது பெற்றோருக்கு இது குறித்து தகவல் தெரிவித்து உள்ளார். அதன் பின்னரே இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மைனர் சிறுவன் உட்பட மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.

 போலீசார்

போலீசார்

தப்பியோடிய ஒருவரைத் தேடி வருகின்றனர். இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த உடனேயே எவ்வித தாமதமும் இல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் மூன்று குற்றவாளிகளை மிக விரைவில் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் மற்றொரு நபரைத் தேடி வருவதாகவும் தெரிவித்தனர். குற்றவாளிகளுக்கு உரியத் தண்டனை பெற்றுத் தருவோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

 போராட்டம்

போராட்டம்

இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அங்கு இப்போது பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சட்ட ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளதாகக் கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவலை

கவலை

இந்தச் சம்பவம் அங்குத் தொலைதூர இடங்களில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. தங்களுக்கு உரியப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அவர்கள் சத்தீஸ்கர் அரசை வலியுறுத்தி உள்ளனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+