மோசமான சாலைகளால் விபத்து குறையும்.. மது குடித்தால் நல்லது தான்..சத்தீஸ்கர் அமைச்சரின் அடடே விளக்கம்
ராய்பூர்: சத்தீஸ்கார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் பிரேம் சாய் சிங், ''மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மட்டுமே பலரும் பேசுவதாகவும், ஆனால் அதில் இருக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து யாரும் வாய் திறப்பதில்லை'' என்றும் பேசியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகலின் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இவரது அமைச்சரவையில் கூட்டுறவு துறையின் அமைச்சராக பணியாற்றி வருபவர் பிரேம் சாய் சிங்.

2 வீடியோக்கள் டிரெண்டிங்
பிரேம் சாய் சிங் மதுபானம் மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துக்கள் குறித்து தற்போது பேசியுள்ள வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அவர் பேசிய 2 வீடியோக்கள் டிரெண்டாகி வருகிறது. அதில் ஒரு வீடியோ ஏன் சாலை விபத்துக்கள் நடக்கிறது என்பது குறித்து பேசியதும், 2-வது வீடியோ மதுபானத்தில் பல நன்மைகள் உள்ளது என்று பேசியிருப்பதும் தான்.

குண்டும் குழியுமான சாலைகள்
'சாலை விபத்துக்கள் குண்டும் குழியுமான சாலைகளின் காரணமாக ஏற்படவில்லை என்றும் நல்ல, சீரமைக்கப்பட்ட சாலைகளில் தான் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகிறது என்றும் சத்தீஸ்கர் அமைச்சர் பிரேம் சாய் சிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும் அந்த வீடியோவில், ''பல இடங்களில் குண்டும் குழியுமான சாலைகள் இருப்பதாகவும், அதனை அரசு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிக புகார்கள் வருகின்றனர். இந்த மோசமாக சாலைகளில் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படவில்லை.

வாகன ஓட்டிகள் வேகமாக செல்கிறார்கள்
ஆனால் நல்ல சீரமைக்கப்பட்ட சாலைகளில் தான் விபத்துக்கள் நடக்கின்றன. ஏனென்றால் நல்ல சாலைகளில் வாகன ஓட்டிகள் வேகமாக செல்கிறார்கள். அதனால் இந்த சாலைகளில் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகின்றன'' என்று கூறியுள்ளார். இதேபோல் மதுபானம் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பலர் பேசுகின்றனர் என்றும் அதில் இருக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து யாரும் வாய் திறக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

பல நன்மைகள் உள்ளன
இது தொடர்பாக அவர் கூறுகையில், ''மதுபானத்தில் ஏராளமான பல நன்மைகள் உள்ளன. ஆனால் இதுவரை யாரும் அதன் நன்மைகள் குறித்து பேசவில்லை. அதனால் ஏற்படும் தீங்குகள் குறித்து தான் பேசுகின்றனர். இதேபோல் பலரும் அதனை எப்படி அருந்துவது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சரியான விதத்தில் தண்ணீர் கலந்து மதுபானம் குடித்தால் பல நன்மைகள் உண்டு" என்று கூறியுள்ளார். அமைச்சர் பிரேம் சாய் சிங்கின் இந்த 2 வீடியோக்களும் சமூக வலைத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அமைச்சரின் பேச்சுக்கு கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications