பாடம் நடத்தும் முன்பு பொருளாதாரத்தை படியுங்கள்: மோடி மீது ப.சி. காட்டம்
டெல்லி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பொருளாதார பாடம் நடத்துவதற்கு முன்பு பொருளாதாரத்தை படிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியது குறித்து, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கருத்துக் கூறியிருந்தார்.

மோடியின் இந்த கருத்தை அவரது முதலாவது பொருளாதார பாடம் என்று சிதம்பரம் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பண வீக்கத்தை கட்டுப் படுத்தவே தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று நான் கூறியதாக நரேந்திர மோடி ஜோத்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசி உள்ளார்.
நான் அப்படி பேசவில்லை. முதலில் பொருளாதாரம் பற்றி மோடி தெரிந்து கொள்ள வேண்டும். நடப்பு கணக்கு பற்றாக் குறை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவே நான் பொது மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று கூறினேன்.
பல தடவை இதை நான் கூறியுள்ளேன். இதை மோடி புரிந்து கொள்ளவில்லை. முதலில் நரேந்திர மோடி நமக்கு வரலாறு பற்றி பாடம் நடத்தினார். இப்போது பொருளாதாரம் பற்றி பாடம் நடத்துகிறார்.
பண வீக்கத்துக்காக தங்கம் வாங்குவதை குறையுங்கள் என்று நான் சொல்லவில்லை. எனவே முதலில் மோடி பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
மோடி அளவுக்கு நான் படிக்கவில்லை. பணவீக்கம் என்பது தங்கம் வாங்குவதால் பாதிக்காது. அதே சமயம் ஊழலால் பணவீக்கம் ஏற்படும் என்று தெரிந்து வைத்திருக்கிறேன் என்றார் சிதம்பரம்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications