For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் சோதனையில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்- குற்றவாளியை கண்டறிய விசாரணை

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஆபாச வீடியோக்கள் சிக்கியதை அடுத்து போலீஸார் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக மாநில இளைஞர் மேம்பாடு துறை செயலாளராக கபில் மோகன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியாற்றி வருகிறார். இவர் மீது ஊழல் புகார் எழுந்ததால் லோக் ஆயுக்தா போலீஸார் அவருக்கு சொந்தமான அலுவலகம், வீடுகளில் கடந்த ஆண்டு சோதனை நடத்தின‌ர்.

‘Child porn’ charge on IAS official under probe for corruption in Karnataka

பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்பூரில் கபில் மோகனின் தந்தை நரேஷ் மோகன் மற்றும் மகன் அஹான் மோகன் நடத்தி வரும் பி.கே.எஸ். பைனானஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடத்தினர். சோதனையில் நான்கு 37 ரூபாய் கோடி ரொக்கமும், இரண்டரை கிலோ தங்கமும், ஹார்ட் டிஸ்க் ஒன்றும் சிக்கிய‌து.

அந்த ஹார்ட் டிஸ்கில் குழந்தைகள் தொடர்பாக 20 ஆபாச பட வீடியோக்களும், பெரியவர்கள் தொடர்பான 17 ஆபாச பட வீடியோக்க‌ளும் பதிவாகி இருந்த‌து. இது தொடர்பாக கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸார் பெங்களூரு மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து ய‌ஷ்வந்த்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் கபில் மோகனின் பெயரோ, அவரது தந்தை, மகனின் பெயரோ சேர்க்காமல் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில் உண்மை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

English summary
This follows the discovery of "thousands of child pornography videos'' on a 250 GB external hard disk that was found alongside the unaccounted wealth seized by the Karnataka CID police during an August 5, 2015 raid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X