சண்டை நடந்த அதே இடம்.. பெரிய திட்டம் போடும் சீனா.. படைகள் குவிப்பு.. காட்டிக்கொடுத்த சாட்டிலைட்!
லடாக்: லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருவது சாட்டிலைட் படங்கள் மூலம் அம்பலம் ஆகியுள்ளது. இதனால் சீனா கொஞ்சம் கூட கல்வான் பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற வில்லை என்பது தெரிய வருகிறது.
இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் சண்டை நடந்தது. இந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். லடாக் எல்லையில் அதில் இருந்து மிக மோசமான பதற்றம் நிலவி வருகிறது.
இது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த சண்டையை தீர்க்க விரும்புகிறோம் என்று சீனா - இந்தியா ஆகிய இரண்டு தரப்புகளும் தெரிவித்துள்ளது. ஆனால் களத்தில் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது.

என்ன நிலைமை
அதன்படி கல்வான் பகுதியில் சண்டை நடந்த அதே இடத்தில் தற்போது சீனா மீண்டும் படைகளை குவித்து வருகிறது. அங்கு இருக்கும் கட்டுப்பாட்டு பகுதி 14ல்தான் இரண்டு நாடுகளுக்கும் இடையே சண்டை நடந்தது. அங்கு சீனா அத்துமீறி டென்ட்களை அமைத்தது. இதனால்தான் அங்கு முதலில் சண்டையே வந்தது. தற்போது அதே இடத்தில் சீனா மீண்டும் ஆக்கிரமிப்புகளை செய்து வருகிறது.

சாட்டிலைட் படங்கள்
சாட்டிலைட் படங்கள் மூலம் இந்த விஷயம் தெளிவாக வெளியே வந்து இருக்கிறது. அதாவது ஜூன் 15ம் தேதியின் சண்டைக்கு பின் சீன படைகள் கொஞ்சம் கூட படைகளை வாபஸ் வாங்கவில்லை. ஆனால் தொடர்ந்து கல்வான் பகுதியில் புதிய டென்ட்களை அமைத்துள்ளது. சாலைகளை அமைத்துள்ளது. பதுங்கு குழிகளை அமைத்து உள்ளது. அதோடு இந்திய வீரர்களை வீழ்த்த சில பொறிகளையும் வைத்து உள்ளது.

உறுதி செய்யும் படங்கள்
முக்கியமாக லடாக்கின் கட்டுப்பாட்டு பகுதி 14க்கு மிக அருகிலேயே சீனா இப்படி படைகளை குவித்து உள்ளது. எங்கு சண்டை நடந்ததோ அங்கிருந்து வெறும் 100 மீ தூரத்திலேயே சீனா இந்த கட்டுமானங்களை செய்துள்ளது. Maxar's Worldview-3 சாட்டிலைட் மூலம் இது உறுதியாகி உள்ளது. இங்கு சீனா தனது நவீன போர் கருவிகளை களமிறக்கி உள்ளது. அதேபோல் பெரிய அளவில் சாலைகள் போட்டுள்ளது.
Recommended Video

என்ன கட்டுமானம்
அதிலும் சீனா இங்கு பெரிய அளவில் கட்டுமான பணிகளை செய்து வருகிறது. 14ம் பகுதியையும் சீனாவையும் இணைக்கும் இடங்களில் சீனா தற்போது கட்டுமான பணிகளை செய்து வருகிறது. இதற்காக அங்கே சீனா புல்டோசர்கள், கட்டுமான பொருட்களை குவித்து இருக்கிறது. பல கட்டுமான பணியாளர்கள் அங்கு தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
|
திட்டம் என்ன
இதனால் சீனா அந்த இடத்தை மொத்தமாக ஆக்கிரமிக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். அதாவது கல்வான் பகுதியை விட்டுக்கொடுக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. வேண்டும் என்றே சீனா பொய் சொல்கிறது. சீனா பெரிய திட்டத்தோடு செயல்படுகிறது என்கிறார்கள். இதனால் சண்டை நடந்த இடத்தில இருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்தியாவும் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது .












Click it and Unblock the Notifications