For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா துப்பாக்கி சூடு நடத்தியது.."பதிலடி" கொடுத்தோம்.. சீனா வைக்கும் புகார்.. நேற்று என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

லடாக்: லடாக் எல்லையில் இந்தியா துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதற்கு பதிலடி கொடுத்தோம் என்றும் சீனா கூறியுள்ளது. இதற்காக ஆங்கிலத்தில் counter measure என்ற வார்த்தையை சீனா பயன்படுத்தி உள்ளது. அதாவது எல்லையில் எதிர் நடவடிக்கை எடுத்தோம் என்று சீனா கூறியுள்ளது.. அது என்ன எதிர் நடவடிக்கை என்பதே தற்போது கேள்வியாக உள்ளது!

Recommended Video

    இந்தியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக புகார் கூறிய சீனா

    லடாக்கில் மீண்டும் இரண்டு நாட்டு எல்லை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. லடாக்கில் இருக்கும் பாங்திசோ என்னும் பனி ஏரி தற்போது பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கு கடந்த மாதம் 29ம் தேதியில் இருந்து மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டு உள்ளது.

    இந்த நிலையில் லடாக்கில் இந்தியா எல்லை மீறி, கட்டுப்பாட்டு பகுதிகளை தாண்டி உள்ளே வந்ததாக சீனா கூறியுள்ளது. இந்தியா மீது அபாண்டமாக சீனா மீண்டும் ஒருமுறை பழி போட்டுள்ளது.

    கல்வான் சண்டையில் கூட துப்பாக்கியை தூக்கவில்லை.. 50 வருடத்திற்கு பின் இப்படி ஒரு சம்பவம்.. ஷாக்கிங்!கல்வான் சண்டையில் கூட துப்பாக்கியை தூக்கவில்லை.. 50 வருடத்திற்கு பின் இப்படி ஒரு சம்பவம்.. ஷாக்கிங்!

    நடந்தது என்ன

    நடந்தது என்ன

    சீனாவின் கூற்றுப்படி பார்த்தால் லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோவில் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளை மீறி இந்தியா உள்ளே சென்றுள்ளது. சீனாவின் எல்லைக்குள் சென்ற இந்தியா அங்கு துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. எச்சரிக்கை விடுக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்தியதா, சீனாவின் வீரர்களை இந்தியா தாக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்தியதா என்பதை சீனா தெரிவிக்கவில்லை.

    எங்கு நடந்தது

    எங்கு நடந்தது

    லடாக்கில் பாங்காங் திசோ அருகே இருக்கும் ஷென்போ மலைப்பகுதியை இந்தியா அத்துமீறி கடந்தது. எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்தியாவின் படைகள் திடீர் என்று ஊடுருவியது, பின் துப்பாக்கி சூடு நடத்தியது என்று சீனா கூறியுள்ளது. அதோடு இதற்கு உரிய பதில் நடவடிக்கை - பதிலடி கொடுத்தோம் என்று சீனா கூறியுள்ளது. சீனாவின் இந்த குற்றச்சாட்டு நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

    நிறைய கேள்விகள்

    நிறைய கேள்விகள்

    அதன்படி எல்லையில் எதிர் நடவடிக்கை எடுத்தோம் என்று சீனா கூறியுள்ளது.. அந்த எதிர் நடவடிக்கை என்ன? சீனா மீண்டும் பதில்துப்பாக்கி தாக்குதல் நடத்தியதா? சீனா தனது வீரர்களை மீண்டும் இந்திய எல்லைக்கு அனுப்பியதா? அல்லது துப்பாக்கி சூட்டிற்கு பின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. சீனா இதை தெளிவாக குறிப்பிடவில்லை. இந்தியாவை குற்றஞ்சாட்டுவதை மட்டும் தனது நோக்கமாக சீனா வைத்துள்ளது.

    இந்தியா எப்படி

    இந்தியா எப்படி

    எல்லையில் பாங்காங் ஹுனான் என்ற பகுதியில் இந்தியா அத்துமீறியது என்று சீனா கூறியுள்ளது.இங்கு பெரும்பாலான பகுதிகள் இந்தியாவின் வசம் உள்ளது. இங்கு இந்தியா அத்துமீற வேண்டிய அவசியமே இல்லை. அப்படி இருக்கையில் இங்கு இந்தியா அத்துமீறியது என்று சீனா கூறுவது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. எப்போதும் போல எல்லையில் அத்துமீறிவிட்டு இந்தியா மீது சீனா பழிபோடுகிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

    சர்ச்சை

    சர்ச்சை

    இதற்கு இன்னும் இந்தியா பதில் அளிக்கவில்லை. இதனால் உண்மையில் எல்லையில் என்ன நடந்தது என்பது குறித்த மர்மம் நிலவி வருகிறது. இன்னொரு பக்கம் லடாக் எல்லை பிரச்னையை தீவிரமாக கவனித்து வரும் பாதுகாப்பு துறை வல்லுநர்கள், எல்லையில் துப்பாக்கி சூடு நடந்தது உண்மைதான் என்கிறார்கள். ஆனால் இந்தியா இப்படி எல்லை தாண்டி சென்று துப்பாக்கி சூடு நடத்தவில்லை.

    மாற்றம் என்ன

    மாற்றம் என்ன

    எல்லையில் இப்படி இந்தியா அத்துமீறவில்லை. சீனா இந்திய எல்லைகள் வர நினைத்தது. அதை இந்திய ராணுவம் தடுத்தது . சீனாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தியா இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது. சீன வீரர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை. சீனாவிற்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில். எச்சரிக்கை விடுக்கும் வகையில் மட்டுமே துப்பாக்கி சூடு நடந்தது என்று கூறுகிறார்கள்..ஆனால் இந்திய ராணுவம் இதில் பதில் அளிக்கும் வரை உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சனையில் ரஷ்யா மத்தியசம் பேசி வருகிறது. இன்று கூட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் . ஜெய்சங்கர் ரஷ்யா செல்கிறார். அங்கு சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ உடன் சந்திப்பு நடத்துகிறார். இதில் இந்தியா மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்தியாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த துப்பாக்கி சூடு புகாரை சீனா கையில் எடுத்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    China standoff with India: Shooting in the border, What happened in Ladakh yesterday?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X