இந்தியாவுக்கு பாடம் கற்பித்தே ஆகவேண்டும்... சீன ஊடகம் அட்டகாசம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுக்கு, நமது சட்டதிட்டங்கள், விதிமுறைகள் பற்றி புரிய வைக்க வேண்டும் என்று, சீனாவின் தேசிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் இருந்து ஆன்மீகப் பயணிகள் குழு ஒன்று திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் பகுதிக்கு, ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருந்தது. அதில் ஆண்கள், பெண்கள் என்று ஏராளமானோர் இருந்தனர்.

Chinese media said, India needs to be taught the rules

இந்த நிலையில், அவர்கள் நாதுலா கணவாய் வழியாக, திபெத் எல்லைக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கிருந்த சீன அதிகாரிகளால் அந்த ஆன்மீகப் பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பயணிகள் அதிர்ச்சி

மோசமான வானிலை காரணமாக, சாலைகள் பாதிப்படைந்துள்ளதால், பின்னர் வரும்படி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் இந்திய அளவில் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சீன அரசு விளக்கம்

இதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சகம், சீன அரசிடம் விளக்கம் கோரியது. மோசமான வானிலை காரணமாக, இவ்வாறு செய்ததாக, சீன அரசு தரப்பில் அப்போது பதில் கூறப்பட்டது. எனினும், திபெத் சீனாவின் பகுதி என, அந்நாடு உரிமை கோரி வருவதால், இந்த விவகாரம் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என, இந்திய அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

இந்தியாவிற்கு புரிய வைக்க..

இந்நிலையில், சீன அரசுக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதல் இதுபற்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சீனாவின் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் பற்றி இந்தியாவுக்கு நாம் புரிய வைக்க வேண்டும்.

சீன ஊடக செய்தி

தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. சீனாவுடன் எல்லை விவகாரங்களில் மோத வேண்டும் என நினைத்தால், அந்த விளைவுகளை இந்தியாவால் ஒருபோதும் தாங்க முடியாது. ஒவ்வொரு முறையும் இந்தியா, எல்லை விவகாரத்தில் அலட்சியமாக செயல்படுகிறது. இந்த முறையும் மானசரோவர் பகுதியில் அத்தகைய சம்பவமே நிகழ்ந்துள்ளது. அந்நாட்டுக்கு தகுந்த பாடம் கற்பித்தே ஆக வேண்டும், '' என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chinese media said "India cannot afford a showdown with China" on border issues.
Please Wait while comments are loading...