ஈழத் தமிழர்களுக்கு செய்ததைப் பாரீர்... பாரீர்.. பத்திரிக்கை விளம்பரம் கொடுத்த மத்திய அரசு
டெல்லி: காமன்வெல்த் மாநாடு தொடர்பாக தமிழகத்தில் காங்கிரஸுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக மக்கள் மன நிலை கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், அதைத் தணிக்கும் வகையில் மத்திய அரசு பத்திரிக்கைளின் உதவியை நாடியுள்ளது.
வட மாநில பத்திரிக்கைகளில் முழு பக்க அளவுக்கு ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு என்னென்ன செய்துள்ளது என்பதை அதில் பட்டியலிட்டுள்ளனர்.
போர் பாதித்த வடக்கு இலங்கையில் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த நிவாரணம், மறு சீரமைப்பு நடவடிக்கைகள் அதில் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.

2009 முதல்
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் 2009ம் ஆண்டு முதல் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இந்தியா செய்த உதவித் திட்டங்கள் என்று தலைப்பிட்டு வரிசையாக சொல்லியுள்ளனர்.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஏற்பாடு
மத்திய வெளியுறவுத்துறையின் ஏற்பாட்டில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது.

உதவி நிவாரணங்களை உடனே அனுப்பினோம்
அதில், 30 ஆண்டு கால போர் முடிவுக்கு வரும் முன்பே பாதிக்கபபட்டு இடம் பெயர்ந்து அவல நிலையில் இருந்த தமிழ் மக்களுக்கு இந்திய அரசு உதவிப் பொருட்களையும் நிவாரணங்களையும் அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.

குர்ஷித் படம் போட்டு
அந்த விளம்பரத்தில் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோர் சந்தித்தபோது எடுத்த படத்தையும் இணைத்துதள்ளனர்.

அனைத்துப் பிரிவினரும் மகிழச்சியில்
அதில், இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பொருளாதாரம், வீட்டு வசதி, அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்வளம், தொழில் கலாச்சாரம், விளையாட்டு அனைத்துப் பிரிவுகளிலும் மக்கள் ஸ்திரமான நிலையைக் கண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரூ. 577 கோடியில் திட்டம்
இந்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு முதல் ரூ. 577 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும், மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 1300 கோடி அளவுக்கு செலவிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திட்டத்துக்காக ரூ. 4000 கோடி
மேலும், வடக்கு ரயில்வேத் திட்டத்திற்காக இந்தியா ரூ. 4000 கோடி அளவுக்கு கடன் வழங்க உறுதி பூண்டுள்ளதாகவும், அதில், ரூ. 1685 கோடி ஏற்கனவே செலவிடப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications