கிறிஸ்துவர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளவேயில்லை- பாஜக எம்பி பேச்சால் சர்ச்சை
கிறிஸ்துவர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளவேயில்லை என பாஜக எம்பி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
Recommended Video

மும்பை: கிறிஸ்துவர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளவேயில்லை என பாஜக எம்பி கோபால் ஷெட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
மும்பை வடக்கு பகுதியின் எம்பியாக உள்ளவர் கோபால் ஷெட்டி (64). இவர் மும்பையில் உள்ள மலாடில் முகமது நபி பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கோபால் ஷெட்டி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் சேர்ந்து இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்தனர். இதில் கிறிஸ்துவர்கள் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை. ஏனெனில் அவர்கள் ஆங்கிலேயர்கள் என்றார்.

கருத்துகள்
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் பூஷன் பாட்டில் கூறுகையில் ஷெட்டி நிறைய தடவை இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த வரலாறு உண்டு.

தற்கொலை சம்பவம்
இதுபோன்ற கருத்துகளுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை சம்பவம் நடைபெற்றது.

பேஷன்
இதுகுறித்து கோபால் ஷெட்டி கூறுகையில் அனைத்து தற்கொலைகளையும் வேலையில்லாமை மற்றும் பட்டினியால் நடந்தவை அல்ல. தற்கொலை என்பது பேஷனாகிவிட்டது. மகாராஷ்டிர மாநிலம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு ரூ5 லட்சம் கொடுத்தால் மற்ற மாநிலம் 7 லட்சம் கொடுக்கிறது.

சர்ச்சை பேச்சு
மற்றொரு மாநிலம் ரூ.8 லட்சம் கொடுக்கிறது. எனவே விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுப்பதிலேயே போட்டி போடும் நிலை உள்ளது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications