டிஆர்டிஓ இயக்குநராக விஞ்ஞானி கிறிஸ்டோபர் நியமனம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) இயக்குநராக டாக்டர். எஸ்.கிறிஸ்டோபர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல பாதுகாப்பு அமைச்சருக்கான ஆலோசகராக ஏவுகணை தொழில்நுட்ப நிபுணரான டாக்டர். சதீஷ் ரெட்டி நியமிக்கப்பட்டு்ள்ளார்.

கிறிஸ்டோபர் தற்போது பெங்களூரிலுள்ள மத்திய அரசின், சிஏபிஎஸ் அமைப்பில் திட்ட இயக்குநராக பணியிலுள்ளார். சதீஷ் ரெட்டி தற்போது, ஹைதராபாத்திலுள்ள மத்திய அரசின், ஆர்சிஐ ஆய்வு அமைப்பில், இயக்குநராக உள்ளார்.
இவ்விரு முக்கிய பதவிகளும் நிரப்பப்பட்டுள்ளதற்கான அறிவிப்பை மத்திய கேபினட் கமிட்டி வெளியிட்டுள்ளது. இரு விஞ்ஞானிகளும் இன்னும் இரு ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருக்க முடியும்.












Click it and Unblock the Notifications