For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆமா, 5 வருஷம் ஆட்சி நடத்தினோம்.. ஆனால் அதிருப்தி அலை இல்லவே இல்லை.. பஞ்சாப் முதல்வர் சன்னி நம்பிக்கை

Google Oneindia Tamil News

அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு எந்தவித அதிருப்தியும் இல்லை. மீண்டும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடத்தில் வென்று ஆட்சியை பிடிக்கும் என முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 மாநிலங்களில் பஞ்சாபை தவிர மற்ற 4 இல் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபையில் 59 அல்லது 60 தொகுதிகள் பெரும்பான்மை பலமாகும். இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் போராடுகிறது. அது போல் பாஜகவும் ஆட்சியை பிடிப்பதற்கு போராடுகிறது.

வழிநடத்திய பெரியார் கொள்கை.. ஸ்டாலினை பின்பற்றி மக்கள் சேவை! சொல்வது பஞ்சாப் பாஜக வேட்பாளர் ஜக்மோகன் வழிநடத்திய பெரியார் கொள்கை.. ஸ்டாலினை பின்பற்றி மக்கள் சேவை! சொல்வது பஞ்சாப் பாஜக வேட்பாளர் ஜக்மோகன்

காங்கிரஸ் செயல்பாடுகள்

காங்கிரஸ் செயல்பாடுகள்

பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் செயல்பாடுகள் குறித்து முதல்வர் சன்னி ஆங்கில ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் வழக்கத்திற்கு மாறாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடிவு செய்தது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

முதல்வர் சன்னி

முதல்வர் சன்னி

இதற்கு முதல்வர் சன்னி பதில் அளிக்கையில் இந்த முறை பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள். எனவே பஞ்சாபிகளின் கோரிக்கையை கட்சி தலைமை ஏற்றுக் கொண்டது என்றார்.

வாக்களிப்பு

வாக்களிப்பு

கடந்த முறை போதை பொருட்களை ஒழிப்போம், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம், வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துவிட்டு அவையெல்லாம் நிறைவேற்றாமல் உள்ளது. அவ்வாறிருக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு ஏன் மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

முதல்வர்

முதல்வர்

இதற்கு முதல்வர் சன்னி பதிலளிக்கையில் நான் முதல்வரானவுடன் 2015 இல் குரு கிராந்த் சாகிப் அவமதிப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசாரணை நடத்தி நீதி வழங்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தேன். அது போல் மணல், மது, போதை பொருள் கடத்தலைத் தடுக்க மிஷன் க்ளீன் எனும் திட்டத்தை தொடங்கினேன். மூத்த அகாலி தள தலைவர் பிக்ராம் சிங் மஜிதியா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை கூட எடுக்கப்பட்டது.

விவசாய கடன் தள்ளுபடி

விவசாய கடன் தள்ளுபடி

அது போல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ 2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அரசு மற்றும் தனியார் வேலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்படும். பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மக்கள் இல்லை. 4 மாதங்களில் எனது பணியை மக்கள் விரும்பினர். மக்கள் என்னை எளிதாக அணுகினார்கள். எனவே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியை காங்கிரஸ் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் முதல்வர் சன்னி.

English summary
Punjab Assembly election: CM Charanjit Singh Channi says he is confident about victory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X