For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு: சிபிஐ அறிக்கை இன்று தாக்கல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கின் விசாரணை நிலவர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்ய உள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் 11ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Coal scam: CBI to file status report in Supreme Court today

1993 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் தொடர்பாக முதல்கட்ட விசரணைக்கு பிறகு 16 முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐ பதிவு செய்திருந்தது. அவற்றில் 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வது என்று சிபிஐ முடிவு செய்துள்ளது.

இதன்படி, விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது. அதிகார வரம்பு மீறல் என்ற காரணத்தை காட்டி விசாரணைக்கு ஒத்துழைக்க தயங்கும் 9 மாநில அரசுகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உள்ள அறிக்கையில் சிபிஐ குறிப்பிடும் என்று தெரிகிறது.

English summary
The Central Bureau of Investigation will submit a status report on Monday informing the Supreme Court about the progress made in the coal scam probe and on filing charge sheet in one of the cases registered by the probe agency in 2012.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X