For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் போராட்டத்தால் கேரளாவிலிருந்து வெளியேறுகிறது கோககோலா

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பொதுமக்கள் போராட்டம் காரணமாக கேரளாவின் பாலக்காடு பகுதியில் மீண்டும் ஆலையை தொடங்க மாட்டோம் என கோககோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடந்து வரும் வழக்கில் கோககோலா தாக்கல் செய்த பதில் மனுவில் இத்தகவலை தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டம் பிளாசிமாடா பகுதியில் கோககோலா ஆலை இயங்கி வந்தது. தண்ணீரை அதிகம் உறிஞ்சி ஆலை அட்டகாசம் செய்வதாக உள்ளூர் மக்கள் எதிர்த்தனர். 12 வருடமாக வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஆலை இயங்காமல் இருந்து வருகிறது.

Coca-Cola to shut the tap on Kerala operations

கோககோலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், நீதிபதி ரோகின்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் ஆஜராகி, தங்கள் மனு தாரருக்கு எதிரான மனு இனிமேல் செல்லாது என அறிவிக்க கோரினார். கோககோலா நிறுவனம், சர்ச்சைக்குரிய இடத்தில் மீண்டும் ஆலை திறக்கப்போவதில்லை என்பதால் இக்கோரிக்கையை வைப்பதாக அவர் தெரிவித்தார்.

English summary
Coco-Cola submitted before the Supreme Court that it would not resume operations in its controversial plant in Palakkad district’s Plachimada.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X