For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகா அரசியலுக்கு பதிலடி.... ம.பி.யில் காங். ஆதரவு 2 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் மாயம்!

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தெரிவித்த 2 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீரென மாயமாகி இருப்பது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் ஜேடிஎஸ்- காங்கிரஸின் 16 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து குமாரசாமி அரசை வீட்டுக்கு அனுப்பியது பாஜக. தற்போது எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு அமைய உள்ளது.

Cong. support 2 BJL MLAs go to undisclosed location

இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்கப் போகிறோம்.. சிக்னல் கிடைத்துவிட்டது என அறிவித்தது பாஜக. இந்த அறிவிப்புக்கு பதிலடியாக காங்கிரஸ் தன் வேலையை காட்டி வருகிறது.

மோடியுடன் முக்கிய கட்சியின் 3 தமிழக எம்.பிக்கள் சந்திப்பா? பரபரக்கும் டெல்லி மோடியுடன் முக்கிய கட்சியின் 3 தமிழக எம்.பிக்கள் சந்திப்பா? பரபரக்கும் டெல்லி

மத்திய பிரதேச சட்டசபையில் இன்று குற்றவியல் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக நாராயண் திரிபாதி, சரத் கவுல் ஆகிய 2 பாஜக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதை சுட்டிக்காட்டி முதல்வர் கமல்நாத் பேட்டியும் அளித்திருந்தார்.

இந்நிலையில் திடீரென காங்கிரஸ் ஆதரவு 2 எம்.எல்.ஏக்களும் மாயமாகி உள்ளனர். அவர்களை காங்கிரஸ் தரப்புதான் ஏதோ இரு இடத்தில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2எம்.எல்.ஏக்களும் இன்று இரவு முதல்வர் கமல்நாத்துடன் இரவு உணவு விருந்தில் பங்கேற்கவும் உள்ளனராம்.

English summary
The two BJP MLAs, Narayan Tripathi & Sharad Kaul, who voted in favour of Kamal Nath Govt during voting on criminal law(amendment) in Madhya Pradesh assembly today, have been sent to an undisclosed location by Congress. They will attend a dinner with CM Kamal Nath tonight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X