முதல்வராக பொறுப்பேற்கும் குமாரசாமியிடம் காங்கிரஸ் கேட்பதெல்லாம் இந்த ரெண்டே ரெண்டுதாங்க...!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குமாரசாமியிடம் காங்கிரஸ் கேட்பதெல்லாம் இந்த ரெண்டே ரெண்டுதாங்க...வீடியோ

  பெங்களூரு: முதல்வராக பொறுப்பேற்கும் குமாரசாமியிடம் சபாநாயகர் மற்றும் துணை முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கிறது.

  கர்நாடகா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜேடிஎஸ் கிங்மேக்கராகும் என்ற நிலை இருந்தது.

  ஆனால் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரஸ் போட்ட திட்டத்தில் ஜேடிஎஸ் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி சார்பில் முதல்வர் பதவி குமாரசாமிக்கு வழங்கப்படுகிறது.

  காங்கிரஸ் ஆதரவு

  காங்கிரஸ் ஆதரவு

  காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களும் ஜேடிஎஸ் கட்சிக்கு எந்த நிபந்தனையும் இன்றி ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி தானாகவே இறங்கி வந்து குமாரசாமியை தூக்கி நிறுத்தியிருக்கிறது.

  ஆனால் கவர்னர் கணக்கு வேறு

  ஆனால் கவர்னர் கணக்கு வேறு

  இதனிடையே பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கால அவகாசம் வழங்கியுள்ளார். பெரும்பான்மை பலம் கொண்ட காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணிக்கு அவர் வாய்ப்பளிக்கவில்லை.

  பாகஜக நிரூபிக்காவிட்டால்

  பாகஜக நிரூபிக்காவிட்டால்

  ஒரு வேளை பெரும்பான்மையை நிரூபிக்க 4 எம்எல்ஏக்கள் கூடுதலாக வாக்களிக்காவிட்டால் பாஜக ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை இழக்கும். அந்த நேரத்தில் ஆளுநர் குமாரசாமிக்கு அழைப்பு விடுப்பார் என தெரிகிறது.

  காங்கிரஸ் வைக்கும் கோரிக்கை

  காங்கிரஸ் வைக்கும் கோரிக்கை

  இதற்கிடையே குமாரசாமியிடம் 2 கோரிக்கைகளை மட்டும் காங்கிரஸ் வைத்துள்ளது. துணை முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று குமாரசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளதாம்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Cong wants speaker and dy CM post from JDS from which Kumarasamy is going to become CM.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற