"இன்னும் 6 மாதத்தில் பாஜக அரசு கவிழும்.!" பீகாரில் ஆவேசமாக பேசிய கார்கே.. உற்று பார்த்த தொண்டர்கள்
பாட்னா: பீகாரில் இன்னும் கொஞ்ச காலத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு மிக பெரிய யாத்திரையை காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி நடத்தி வருகிறது. வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில் நடந்த இந்த யாத்திரையில் பேசிய கார்கே, மிக கடுமையான விமர்சனங்களை மோடி மீது முன்வைத்தார். மோடி வாக்கு திருட்டு மூலம் வெல்ல நினைப்பதாக விமர்சித்த அவர், இரட்டை இஞ்சின் அரசு சீக்கிரமே கவிழும் என்றும் சாடினார்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாக்கு திருட்டு புகாரை முன்வைத்திருந்தார். இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வாக்கு திருட்டு புகாரை முன்வைத்து காங்கிரஸ் தலைவர்கள் பீகாரில் தொடர் பேரணிகளை நடத்தி வருகிறார்கள்.

கார்கே
இதற்கடையே இன்று பீகாரில் நடைபெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் தேஜஸ்வி யாதவ் உடன் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து பேசினார். பீகார் சட்டமன்ற தேர்தல்களில் வாக்குத் திருட்டு மூலம் வெற்றிபெற பிரதமர் நரேந்திர மோடி முயல்வதாக சாடினார்.
அரசு கவிழும்
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை எஞ்சின் அரசு விரைவில் அகற்றப்பட்டு, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் புதிய அரசு அமையும் என்றும் அவர் தெரிவித்தார். பீகாரில் நடைபெற்ற வாக்காளர் அதிகார் யாத்ராவின் நிறைவுப் பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, "பீகாரில் இந்த இரட்டை எஞ்சின் அரசு இன்னும் 6 மாதங்களில் இருக்காது.. ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோரின் புதிய அரசு அமையும்" என்று கூறினார்.
நிதிஷ் குமாரை கைவிடுவார்கள்
இந்த கூட்டத்தில் பேசிய கார்கே, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரையும் கடுமையாக விமர்சித்தார். ஒரு காலத்தில் சமத்துவத்தைப் பற்றிப் பேசிய நிதிஷ் குமார், இப்போது பாஜக ஆர்எஸ்எஸ் உடன் இணைந்துள்ளார் என்று கார்கே சாடினார். நிச்சயம் சீக்கிரமே நிதிஷ் குமாரை ஆர்எஸ்எஸ்-பாஜக கைவிடும் என்றும் அவர் கூறினார்.
ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடந்தி சில வாரங்களாகவே பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையை நடத்தினர். பீகாரில் உள்ள 38 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் வழியாக 1,300 கி.மீ தூரம் கடந்து, 110 சட்டமன்றத் தொகுதிகள் வழியாக இந்த பேரணி சென்றது.. இந்த யாத்திரையின் நிறைவாகவே இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தான் கார்கே இந்த கருத்துகளை கூறினார்.
வாக்கை திருடும் பாஜக
கார்கே மேலும் பேசுகையில், "இந்த வாக்காளர் அதிகார யாத்திரை நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது. அதை சீர்குலைக்க முயற்சிகள் நடந்தன.. ஆனால் பீகார் மக்களும் மகாபந்தன் தலைவர்களும் பின்வாங்கவில்லை.. மோடி பீகார் தேர்தல்களில் வாக்குத் திருட்டு மூலம் வெற்றிபெற முயற்சிக்கிறார். எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், மோடியும் அமித் ஷாவும் உங்களை ஒடுக்குவார்கள்." என்று கார்கே கூறினார்.
'காந்தி சே அம்பேத்கர்' என்ற இந்த யாத்திரையை பீகார் போலீசார் பாதியிலேயே நிறுத்தினர். இதனால் அங்கிருந்தபடி தலைவர்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றினர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானி, சிபிஐ (எம்எல்) லிபரேஷன் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐயின் அன்னி ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யூசுப் பதான், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications