‛‛படகு சவாரி’’.. ஒரு வாரமாச்சே.. மகன் ராகுல் காந்தி எங்கே? நேராக காஷ்மீர் சென்ற சோனியா காந்தி
ஜம்மு காஷ்மீர்: கடந்த ஒரு வாரமாக லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீர் சென்ற சோனியா காந்தி அங்கு உற்சாகமாக படகு சவாரி செய்து ராகுல் காந்தியை சந்தித்து மகிழ்ந்தார்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது பல இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து சாதாரண மக்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். விவசாயிகள், லாரி டிரைவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தும் வருகிறார்.

இந்நிலையில் தான் ராகுல் காந்தி கடந்த ஒரு வாரமாக லடாக், ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். முதலில் லடாக் யூனியன் பிரதேசத்தில் ராகுல் காந்தி கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன்பிறகு மக்களோடு மக்களாக கால்பந்து போட்டியை ரசித்தார்.
அதன்பிறகு அவர் பாங்காங் ஏரிக்கு பைக்கில் ரைடு சென்றார். அதோடு மறைந்த அவரது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். மேலும் கார்கில் போரில் உயிர் நீதித்த படை வீரர்கள், அதிகாரிகளின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். தற்போது ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
இவ்வாறு கடந்த ஒரு வாரமாக ராகுல் காந்தி லடாக், காஷ்மீரில் வலம் வருகிறார். இத்தகைய சூழலில் தான் இன்று சோனியா காந்தி திடீரென காஷ்மீருக்கு புறப்பட்டு சென்றார். இந்த பயணம் என்பது சோனியா காந்தியின் தனிப்பட்ட பயணம் என்பதால் அதுபற்றிய முழுவிபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் ராகுல் காந்தியை பார்க்க சோனியா காந்தி காஷ்மீர் புறப்பப்பட்டது உறுதி செய்யப்பட்டது. விமானத்தில் சோனியா காந்தி இன்று ஸ்ரீநகர் சென்றடைந்தார். அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வரவேற்றனர். அதன்பிறகு அவர் அங்குள்ள நிகீன் ஏரியில் உற்சாகமாக படகுசவாரி செய்தார். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த படகு சவாரியை முடித்த சோனியா காந்தி இரவில் மகன் ராகுல் காந்தியை சந்தித்தார். ராகுல் காந்தி தற்போது நீகின் ஏரியில் உள்ள படகு இல்லத்தில் தங்கியுள்ளார். ஆனால் சோனியா காந்தி வந்துள்ளதால் ஓட்டலுக்கு மாறலாம் என கூறப்படுகிறது. மேலும் விரைவில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி தனது கணவர் வதோதராவுடன் அங்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications