Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத்தில்..இதுவரை இல்லாத படுதோல்வி.. மொத்தமாக சரணடைந்த காங்கிரஸ்.. நம்பர் ரொம்ப மோசம்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் தேர்தல் வரலாற்றில் பாஜக இந்த முறை புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதுவரை எந்த கட்சியும் 150 தொகுதிகளில் வெற்றி பெறாத நிலையில் முதன் முறையாக பாஜக 156 தொகுதிகளில் வென்று சாதனை படைத்திருக்கிறது. அதேபோல காங்கிரஸ் இதுவரை இல்லாத அளவில் தோல்வியை சந்தித்திருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 1960ல் பிரிக்கப்பட்ட குஜராத்தில் 1962ம் ஆண்டு முதன் முதலாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ்தான் அமோக வெற்றி பெற்றது.

இதனையடுத்து நடந்த தேர்தல்களில் 1990 வரை காங்கிரசும் 1995 முதல் பாஜகவும் வெற்றி பெற்று வந்திருக்கின்றன. இந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

 காங்கிரஸ் ஆதிக்கம்

காங்கிரஸ் ஆதிக்கம்

1962ல் மாநிலத்தில் நடைபெற்ற முதல் தேர்தலில் காங்கிரஸ் 113 தொகுதிகளை வென்று தனது வெற்றி கணக்கை தொடங்கியது. இதன் பின்னர் 1972, 1980 மற்றும் 1985 என குறிப்பிட்ட மூன்று தேர்தல்களில் சுமார் 140க்கும் அதிகமான தொகுதிகளை காங்கிரஸ் வெற்றி கொண்டிருந்தது. அதன் பின்னர் 1990ல் காங்கிரஸ் தனது வெற்றிக் கணக்கை முடித்துக்கொண்டது. சுமார் 28 ஆண்டுகாளக பெற்று வந்த வெற்றி 1995 தேர்தலில் முடிவுக்கு வந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 45 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது. இதற்கு முன்னர் 1990 தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 33 தொகுதிகளைதான் வென்றிருந்தது. ஆனால் கூட்டணி வைத்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. ஆனால் 1995ல் இதற்கு வாய்ப்பில்லாமல் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது.

 பாஜக ஆதிக்கம்

பாஜக ஆதிக்கம்

அதன் பின்னர் பாஜகதான் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்ட தொடங்கியது. 1995 தேர்தலில் பாஜக அதிரடியாக 121 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரசுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. காங்கிரஸ் இதில் 45 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1998ல் பாஜக-117 காங்கிரஸ் -53, 2002ம் ஆண்டு தேர்தலில் பாஜக 121ஐ கைப்பற்ற காங்கிரஸ் 51ல் சுருங்கியது. இதற்கடுத்து 2007, 2012 மற்றும் 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக முறையே 117, 115, 99 என வெற்றி வாகை சூடியது. காங்கிரஸ் தன் பங்குக்கு 51, 61 மற்றும் 77 என தொகுதிகளை கைப்பற்றி பாஜகவை பின்தொடர்ந்து வந்தது. கடைசியாக நடந்த தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் வெறும் 10%தான் வாக்கு வித்தியாசம் இருந்தது.

 2022 முடிவு

2022 முடிவு

இதற்கு 2017க்கு முன்னர் நடைபெற்ற படிதார் மற்றும் தலித் மக்கள் போராட்டங்கள்தான் காரணம். 2017க்கு பிறகு இந்த போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள் பாஜகவிலும் காங்கிரசிலும் ஐக்கியமாகிவிட்டனர். இதற்கடுத்து தற்போதைய (2022) தேர்தலில் காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெறும் 16 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருக்கிறது. இது வரலாற்று தோல்வியாகும். இதன் மூலம் கட்சி 61 தொகுதிகளை இழந்திருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவின் தேர்தல் வியூகத்தை விட காங்கிரஸின் தேர்தல் வியூகம் பலவீனமாக இருந்ததே தோல்விக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது தேர்தல் பிரசாரத்தில் முக்கிய தலைவர்களை காங்கிரஸ் களம் இறக்கி இருந்தாலும், அதனை முழுமையான அளவிலும், மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் கட்சி வெற்றிகரமாக செய்து முடிக்கவில்லை.

காரணம்

காரணம்

இதற்கு மாறாக வேலையின்மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மோர்பி பாலம் விபத்து என ஏகப்பட்ட பின்னடைவுகள் இருந்தாலும் அதனை மறக்கடிக்க செய்யும் அளவுக்கு பாஜக அதன் தலைவர்களை வரிசையாக களம் இறக்கி வெற்றியை வசமாக்கியுள்ளது. இது போதாது என காங்கிரசின் காலை வார ஆம் ஆத்மியும் முந்திக்கொண்டு வரிசையில் மூன்றாவது இடத்தில் நின்றுகொண்டிருந்தது. குஜராத்தை பொறுத்த அளவில் சிறுபான்மையினர் மற்றும் தலித்/பழங்குடியினர் சமூகத்தினர்தான் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்தனர். எனவே இதனை குறி வைத்து ஆம் ஆத்மி இறங்கி பணியாற்றிய நிலையில் இந்த வாக்கு வங்கி ஒட்டு மொத்தமாக சிதறி அவை பாஜக பக்கம் சென்றிருக்கிறது. இவையெல்லாம் தோல்விக்கான காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல மறுமுனையில் ராகுல் காந்தி பாரத் ஜடோ யாத்திரையில் ஈடுபட்டு குஜராத்தில் சரியாக பிரசாரம் செய்யாததுதான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று அக்கட்சித் தலைவர்கள் சிலர் விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+