குஜராத் ராஜ்ய சபா தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த காங். எம்எல்ஏக்கள்… சோனியா காந்தி அவசர ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு வாக்களித்தோம் எனப் பகிரங்கமாகவே செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Congress holds Emergency meeting

இந்நிலையில், குஜராத் ராஜ்யசபா தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மனு ஒன்று தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வாக்குகள் செல்லாது என அறிவித்துத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநில சிக்கல் குறித்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ள இதில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்ததால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress party holds emergency meeting in Delhi.
Please Wait while comments are loading...