For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தான் அரசின் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு கொண்டுவரப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் குஜ்ஜார் மற்றும் இதர சமூகத்தினருக்கு சிறப்பு பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் 5% இடஒதுக்கீட்டுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 14% இடஒதுக்கீட்டுக்கும் வகை செய்யும் தனித்தனி மசோதாக்கள், அந்த மாநில சட்டசபையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டன.

Congress Lambasts Rajasthan Move Raising Quota Cap to 68 per cent

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சச்சின் பைலட் கூறியதாவது:

கல்வியிலும், சமூகரீதியிலும் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கத்தான் சட்டத்தில் இடம் உள்ளது. இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ராஜஸ்தான் அரசு எப்படி இடஒதுக்கீடு அளிக்கும் எனத் தெரியவில்லை.

மாநில அரசின் இந்த நடவடிக்கை கேலிக்கூத்தானதாகும். சட்ட நடைமுறைகளுக்கு உள்பட்டு இடஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது.

இவ்வாறு சச்சின் பைலட் சாடியுள்ளார்.

ராஜஸ்தானில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு கொண்டுவரப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

English summary
A controversy erupted on Wednesday over the passage of two bills by Rajasthan Assembly that will push the quota percentage in the state to 68 per cent, much beyond the cap of 50 per cent, with Congress terming it as a farcical attempt even as the state government found nothing wrong.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X